ஏப்ரலில் கட்சி, ஆகஸ்டில் பொதுக்கூட்டம், செப்டம்பரில் சுற்றுப்பயணம்: ரஜினியின் அரசியல் ஆரம்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வரும் ஏப்ரலில் அவர் கட்சி ஆரம்பித்து உறுதி என்று கூறப்படுகிறது

பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் ரஜினி கட்சியுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், பாஜக மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. பாஜகவை கூட்டணியில் சேர்த்தால் எதிர்ப்பு ஓட்டுகள் அதிகமாகும் என்பதால் இந்த திட்டம் என தெரிகிறது

கமலஹாசன் கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் இப்போது வரை ரஜினிக்கு இல்லை என்பது தான் உண்மை என்று கூறப்படுகிறது. ஏப்ரலில் காட்சி தொடங்கும் ரஜினிகாந்த் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தவும், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது

Leave a Reply