shadow

எம்ஜிஆர் மாதிரி ஆகணும்ன்னு நினைப்பது முட்டாள்தனம்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனியார் கல்லூரி ஒன்றில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து பேசினார். அரசியல் அறிவிப்புக்கு முன் அவர் கலந்து கொண்ட முதல் பேச்சில் மிகத்தெளிவாக, தடுமாற்றமின்றி இருந்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தன் மீது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வைத்த விமர்சனங்கள் அனைத்திற்கும் அவருடைய இந்த ஒரு மணி நேர பேச்சில் பதிலடி இருந்தது. குறிப்பாக நடிகர்கள் எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று கூறியவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி அபாரமானது. இந்த விழாவில் அவர் பேசியதாவது:

“மாணவர் பருவம் தான் வாழ்க்கையில் வசந்த காலம். அதேபோல் அதுதான் சோதனையான நாட்களும். அரசியலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள். ஆனால் படிக்கும் காலத்தில் முழுவதுமாக அரசியலில் ஈடுபட வேண்டாம். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். நானே கட்சி ஆரம்பித்தாலும், அதில் ஈடுபடக் கூடாது. ஓட்டு மட்டும் போட்டுவிட்டு படிப்பை பாருங்கள்.

நானும் தொடக்க கல்வியை கன்னட மொழியில்தான் பயின்றேன். பின்னர், ஒருகட்டத்தில் என்னை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தார்கள். அங்கு எல்லாமே ஆங்கிலம் தான். ஆங்கிலம் தெரியாமல் நான் பின் தங்கிவிட்டேன். ஆங்கில மொழி கற்பது மிகவும் முக்கியம். தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருப்பார்கள். ஆனால், மேல்படிப்பில் ஆங்கில வழிக் கல்விதான்.

எந்த மொழியில் தவறாக பேசினாலும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், ஆங்கிலத்தில் தட்டுதடுமாறி பேசினால் கிண்டல் செய்வார்கள் கலாட்டா செய்வார்கள். மற்றவர்கள் ஏதாவது சொல்வார்கள் என்றே ஆங்கிலத்தில் பேச நாம் தயங்குகிறோம். ஆங்கில மொழி பேச பேசத்தான் வரும். மாணவர்கள் நண்பர்களுக்குள் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். ஆங்கிலம் தான் உங்களுக்கு எதிர்காலம். உங்களது தொழிலுக்கு முக்கியமானது. இணையதள உலகில், சர்வதேச அளவில் ஆங்கில மொழி முக்கியமானது. மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள், அதுதான் முக்கியம்.

தமிழன் தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். இன்றைய காலத்தில் மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு வேறு மாநிலங்களுக்கு, வேறு நாடுகளுக்கு சென்று தொழில் செய்தால்தான் அது தமிழுக்கு பெருமை, தமிழனுக்கு பெருமை. அப்துல் கலாம், சுந்தர் பிச்சையால் தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை. அவர்களது ஆங்கில புலமைதான் அதற்கு முக்கிய காரணம்.

துணைவியை சரியாக தேர்ந்தெடுக்காவிட்டாலும் நண்பனை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல நண்பன் தான் வாழ்க்கைய சரியான பாதையில் கொண்டு செல்வார்கள்”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Leave a Reply