shadow

ரசிகர்களை இன்று சந்திக்கின்றார் ரஜினிகாந்த்: அரசியல் அறிவிப்பு வருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை இரண்டாம் கட்டமாக சந்திக்கவுள்ளார். இன்றைய முதல் நாள் அல்லது கடைசி நாளான 31ஆம் தேதி அவர் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்திக்கும் விபரங்கள்:

ரஜினிகாந்த் இன்று காஞ்சீபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்ட ரசிகர்கள் ஆயிரம் பேரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நாளை காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு தொடங்குகிறது.

மதியம் 1 மணிவரை ரசிகர்களை சந்திக்கிறார். ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்கள் அனைவருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் உடனே ரசிகர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

27-ந் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களையும், 28-ந்தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்களையும் சந்திக்கிறார்.

29-ந்தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு, ரசிகர்களையும் ரஜினி சந்திக்கிறார். வெளி மாவட்ட ரசிகர்கள் குறிப்பிட்ட நாட்களில் சென்னை வர ரஜினியின் அந்தந்த மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரசிகர்களை 30, 31 ஆகிய 2 நாட்கள் ரஜினி சந்திக்கிறார். முதல் நாள் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மாவட்ட ரசிகர்களில் ஒரு பகுதியினரை சந்திக்கிறார். மறுநாளும் விடுபட்ட சென்னை ரசிகர்களை சந்திக்கிறார்.

Leave a Reply