ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – நடிகர் ரஜினிகாந்த்

ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரண்டாவது நாளாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சிக்கு முன்னர் ரஜினிகாந்த் பேசியதாவது: ரசிகர்களை இரண்டாவது நாளாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்கள் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. நான் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவெனில் நமக்கு நமது குடும்பம் தான் மிகவும் முக்கியம். நமது தாய் தந்தையர் வாழும் தெய்வங்கள், குழந்தைகள் நமது ஆஸ்திகள்.

இன்னும் ரசிகர்களாக உங்களிடம் நிறைய பேச வேண்டியதுள்ளது. எதிர்கால அரசியல் திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும், 4 நாட்களில் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்

நாம் அனைவரும் ஆக்கபூர்வமாக மட்டுமே சிந்திக்க வேண்டும், அழிவுபூர்வமான சிந்தனையே நமக்கு இருக்கக்கூடாது’ என்று கூறினார்.

Leave a Reply