மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்: முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்

மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்: முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றம் அடைந்ததாக கூறினார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றும் அவர் கட்சித் தலைவராக இருக்கும் மட்டுமே இருப்பார் என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நாளை காலை 8 மணிக்கு மீண்டும் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் ஒரு சில முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் முக்கிய தகவல்களை அளிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

தமிழக அரசு கடந்த சில மாதங்களாகவே ரஜினிகாந்தை சுற்றி இருப்பதால் அவரது நாளை அறிவிக்கவிருக்கும் அரசியல் குறித்த செய்திகள் செய்திகள் என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு அரசியல்வாதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply