ரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு

ரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற போது இந்த விழாவில் பேசிய இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ’ரஜினி தான் அடுத்த எம்ஜிஆர்’ என்று பேசிய போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கரகோஷம் எழுந்தது

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிக்க உள்ள நிலையில் எம்ஜிஆரின் அரசியல் வெற்றி ரஜினிக்கும் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் ஏஆர் முருகதாஸ் கூறினாரா? அல்லது எம்ஜிஆர் ஸ்டைலில் ரஜினிகாந்த் நடித்து வருவதாக கூறினாரா? என்பது ஏஆர் முருகதாஸ் மட்டுமே தெரிந்த உண்மை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ரஜினி தான் அடுத்த எம்ஜிஆர் என்று ஏஆர் முருகதாஸ் கூறிவிட்டு புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று பொடி வைத்துப் பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மொத்தத்தில் இந்த ஆடியோ விழா ரஜினியின் அரசியல் வருகையை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply