shadow

ரஜினி படிப்பறிவில்லாதவர்: எனவே அவர் அர்சியலுக்கு வரக்கூடாது: சுப்பிரமணியம் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் பல அரசியல்வாதிகள் உறுதியாக உள்ளனர். ஜெயலலிதா, கருணாநிதி என்ற இருபெரும் தலைவர்கள் இலலாத களத்தில் எளிதில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவு காணும் அரசியல் கட்சிகளுக்கு ரஜினியின் அரசியல் வருகை சற்று அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

எனவே ரஜினிக்கு ஆரம்பத்திலேயே கோபத்தை ஏற்படுத்தி அவரை அரசியலுக்கு வரவிடாமல் செய்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று மீண்டும் அவரை படிப்பறிவில்லாதவர் என்று விமர்சனம் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது: ரஜினிக்கு பாஜக கட்சியில் இடம் கொடுக்கக் கூடாது.மேலும் அவரிடம் உறுதியான கருத்து கிடையாது. ஒரு நாள் ஒன்றை சொல்வார்.அடுத்த நாள் அதை மாற்றிப் பேசுவார். ஒரு நாள் ஜெயலலிதாவை எதிர்த்து பேசுவார். மறுநாள் அவருக்கே ஆதரவை தெரிவிப்பார். ரஜினி இப்படி ஸ்திரமாக அரசியல் செய்ய முடியாததற்கு காரணம்,அவருக்கு படிப்பறிவு கிடையாது என்பதுதான்.” என சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார். ரஜினி கர்நாடகத்தில் பிறந்த ஒரு மராட்டியர். எனவே அவரால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது” என சுப்ரமணியசாமி முன்னர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த முறை மிகக் கடுமையாக, அவரது கல்வியறிவு குறித்து சுப்ரமணிய சாமி தாக்கிப் பேசியிருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply