shadow

rajini interviewஎனது வாழ்வில் அரசியல் பிரவேஷம் என்பது தெய்வச்செயல். கடவுள் மனது வைத்தால் மட்டுமே அது நடக்கும். ஒரு மாநிலத்தின் முதல்வரை பொதுமக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் நேற்று விமானம் மூலம் மங்களூர் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் மத்தியில் அளித்த பேட்டியில் “சிமோகா மாவட்டத்தில் நடக்கும் லிங்கா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மங்களூர் வந்து உள்ளேன். நான் இங்கு 22 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

“லிங்கா” படம் ஏற்கனவே கர்நாடக மாநிலம் மைசூரில் தொடங்கி மண்டியா, மலவள்ளி, மத்தூர் ஆகிய பகுதியில் படபடிப்பு நடத்தப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சிமோகாவில் 21 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் “லிங்கா” படத்தை, எனது பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி திரைக்கு கொண்டு வர வேலைகள் நடந்து வருகிறது என்றார்.

இதைத் தொடர்ந்து, நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேள்விக்கு பதில் அளித்த  ரஜினிகாந்த், ‘அரசியலில் நுழைவது தெய்வச் செயல். கடவுள் மனது வைத்தால் அது நடக்கும். ஒரு மாநிலத்தின் முதல்வரை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.

உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தீர்களே, தற்போது உடல் நிலை எப்படி இருக்கிறது என்ற மற்றொரு கேள்விக்கு, தற்போது நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்’ என்றார்.

Leave a Reply