shadow

சிவாஜிகணேசன் மணிமண்டபம் அறிவிப்பு. ஜெயலலிதாவுக்கு ரஜினி-கமல் பாராட்டு

sivajiநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என நேற்று முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு சிவாஜி ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் திரையுலகினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் திரையுலக பிரபலங்கள் முதல்வருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் அளித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ‘மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.’

உலக நாயகன் கமல்ஹாசன்: ‘நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவு கோரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன்

பிரபு: எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அம்மா அறிவித்து இருப்பது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருக்கிறார்கள். எங்களின் உச்சியை குளிர வைத்த அம்மாவுக்கு எனது சார்பிலும், அண்ணன் ராம்குமார் சார்பிலும், மகன் விக்ரம்புரபு சார்பிலும் மற்றும் குடும்பத்தினரின் அனைவரது சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சரத்குமார்: மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் சங்க சரித்திரத்தில் உங்களது செயல் சாதனையாக என்றும் போற்றப்படும்.

மேலும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் திருநாவுக்கரசு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வசந்த் அன்கோ உரிமையாளர் வசந்தகுமார் உள்பட பலர் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply