shadow

ஜோக்கரை பாராட்டிய மாமனார் ரஜினியும், மருமகன் தனுஷும்

jokerகடந்த வெள்ளியன்று வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளதோடு, கோலிவுட் பிரபலங்களின் பாராட்டுதல்களையும் பெற்று வருகிறது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த படத்தை பார்த்து பாராட்டியதோடு இயக்குனர் ராஜூமுருகனுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை ரஜினியும் அவரது மருமகன் தனுஷும் தங்களுடைய டுவிட்டரில் பாராட்டியுள்ளனர். ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டரில், ‘ஜோக்கர் மிக அருமையான திரைப்படம். படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் தனுஷும் தனது டுவிட்டரில், ”ஜோக்கர்’ படத்தில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என அனைவரும் தங்களுடைய பணியை அற்புதமாக செய்துள்ளனர். எனது படத்தால் எனது கண்களில் கண்ணீர் வந்தது. தயவு செய்து அனைவரும் பாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘ஜோக்கர்’ படத்தின் இசையமைப்பாளர் சீன்ரோல்டான் அவர்களின் பின்னணி இசைக்கு தனியாக ஒரு பாராட்டு பதிவையும் அவர் பதிவு செய்துள்ளார்.

மாமனாரிடமும், மருமகனிடமும் மாறி மாறி பாராட்டுதல்கள் பெற்றுள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply