shadow

உலக நாயகன் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் விரைவில் குணமடைய வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கமல்ஹாசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனை ரஜினிகாந்த் நேரில் சந்திக்கவில்லை என்பதும் தொலைபேசியில் மட்டுமே நலம் விசாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.