மலேசிய பிரதமரை சந்திக்கின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி

மலேசிய பிரதமரை சந்திக்கின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் மலேசிய பிரதமருக்கும் நெருங்கிய நட்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. காலா படத்தின் படப்பிடிப்பின்போது மலேசிய பிரதமரை ரஜினி சந்தித்தார். அதேபோல் மலேசிய பிரதமர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது சென்னையில் உள்ள ரஜினி வீட்டிற்கு வருகை தந்தார்

இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் நாளை நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மலேசியா சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் மலேசிய பிரதமரை ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் ஒரு நாட்டின் பிரதமரை சந்திக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply