shadow

ரஜினியுடன் நேருக்கு நேர் மோதும் தனுஷ்

rajiniநாளை சிம்புவின் ‘வாலு’ மற்றும் ஆர்யாவின் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’ ஆகிய படங்கள்  நேருக்கு நேர் மோதவுள்ளது. இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் முன்பதிவு நடந்து வருவதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி ஒருபுறம் நடந்து வரும் நிலையில் இன்னொரு புறம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் தொலைக்காட்சிகளில் மோதுகிறது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் ரஜினியின் ‘லிங்கா’ ஜெயா டிவியிலும், தனுஷ் தயாரித்த ‘காக்கா முட்டை’ திரைப்படம் விஜய் டிவியிலும், சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கி சட்டை’ சன் டிவியிலும் ஒளிபரப்பாக உள்ளது. இவற்றில் காக்கி சட்டையும், லிங்காவும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை ஒப்பிடும்போது ‘காக்கா முட்டை’ படத்திற்கு அதிகளவு விளம்பரங்கள் குவிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தேசிய விருது மற்றும் சர்வதேச விருதுகளை குவித்துள்ளதால் அன்றையை தினம் பெரும்பாலானோர் இந்த படத்தை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply