shadow

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது

லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கு ’லால் சலாம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவும், ப்ரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு பணிகளையும் செய்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது