ஊழலும் பண்ண மாட்டேங்குறார்… ஊழல் பண்ணவும் விட மாட்டேங்குறார்… ரஜினி ரசிகர்கள் கிண்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஊழல் ஒழிய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த திட்டங்களை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். இதுகுறித்து மூத்த அரசியல்வாதி முத்தரசன் அவர்கள் கூறியபோது, ‘ரஜினியும் தூங்க மாட்டேங்குறார்… மற்றவர்களையும் தூங்க விடமாட்டேங்குறார்’ என்று விமர்சனம் செய்தார்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: இதை இப்படி படிக்கனும்ல முத்தரசர். “ரஜினியும் ஊழல் பண்ணி சம்பாதிக்க மாட்டேங்குறார். அவர் அரசியலுக்கு வந்து, மக்களிடம் இப்படியெல்லாம் பேசி, மற்றவர்களையும் ஊழல் செய்ய விட மாட்டேங்குறார். ரொம்ப கஷ்டமா போச்சு எங்க கழக எஜமான்களுக்கு” என்று கிண்டலடித்துள்ளனர்.

ரஜினி ரசிகர்களின் இந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply