விஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகர்

அதிர்ச்சி காரணம்

கொரோனாவுக்கு அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா? என்ற வாக்குவாதம் முற்றி ரஜினி ரசிகர் ஒருவர் விஜய் ரசிகரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் அருகே யுவராஜ், தினேஷ் பாபு ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். யுவராஜ் விஜய் ரசிகராகவும், தினேஷ் பாபு ரஜினி ரசிகராகவும் இருந்த நிலையில் இருவரும் சமீபத்தில் மது அருந்தினர்.

இந்த நிலையில் இருவரும் மது அருந்தி போதையில் கொரோனாவுக்கு அதிக நிதியுதவி செய்தது ரஜினியா? விஜய்யா என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி ரஜினி ரசிகர் தினேஷ்பாபு, விஜய் ரசிகர் யுவராஜை கொலை செய்துவிட்டதாகவும் தெர்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.