ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீடு நாளை நடக்க உள்ள நிலையில் இன்று கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழாவின் அழைப்பிதழால் கோலிவுட்டில் பெரும் பிரச்சனை உண்டாகியுள்ளது.
கவியரசு கண்ணதாசனுக்கு அடுத்த இடம் பெற்றுள்ள மறைந்த கவிஞர் வாலியை ரஜினிகாந்த் அவமரியாதை செய்துவிட்டதாக கோலிவுட் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோச்சடையான் அழைப்பிதழில் வைரமுத்துவின் பெயரை முதலில் போட்டுவிட்டு, இரண்டாவதாக வாலியின் பெயர் போடப்பட்டுளளது. இது கோலிவுட்டின் பல வி.ஐ.பிக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
வாலி உயிரோடு இருந்த காலத்திலேயே பணத்தை விட மரியாதைக்குத்தான் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார். அப்படிப்பட்ட இறவாப்புகழ் பெற்ற வாலியின் பெயரை ரஜினிகாந்த் அவமரியாதை செய்ததை அவரது ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எம்.ஜி.அர் மற்றும் சிவாஜி போன்ற நடிகர்களே வாலியின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தனர். அப்படிப்பட்ட மாபெரும் கலைஞரை ரஜினி அவமரியாதை செய்தது நியாயமா என்று அவரே புரிந்து கொள்ள் வேண்டும். இதற்கு அவர் கண்டிப்பாக நாளை நடக்கவுள்ள பாடல் வெளியீட்டு விழாவில் விளக்கமளிக்க வேண்டும் என்று வாலியின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.