ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? இன்று நீதிமன்றம் முடிவு

ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? இன்று நீதிமன்றம் முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் இந்த மனு விசாரணைக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது ரஜினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ’பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளன’ என்றும் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றும் வாதாடினார்

ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதா இல்லையா என்பதை இன்று உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply