shadow

ரஜினி, மம்முட்டி, மணிரத்னம் இணையும் ‘தளபதி 2’ எப்போது?

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்தசாமி நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘தளபதி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பல ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் ‘தளபதி 2’ குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது.

‘தளபதி 2’ படத்திற்கான திரைக்கதையை மணிரத்னம் முடித்து தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், ரஜினி ஓகே சொன்னால் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி தற்போது 2.0 படத்தை முடித்துவிட்டு இம்மாத இறுதியில் ரஞ்சித் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருட அரையிறுதியில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன்பின்னர் அவர் மணிரத்னம் படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply