shadow

15

படையப்பா படத்தின் கடைசி நேரத்தில் என்னையும் நடிக்க வைத்து ரஜினி சதி செய்துவிட்டார் என கே.எஸ்.ரவிகுமார் சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளித்துள்ளார்.

‘படையப்பா’ கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு. ‘ஓஓஓஓ…. கிக்கு ஏறுதே’ பாட்டும் மட்டும் பாக்கி. ‘உங்க எல்லா படத்துலயும் தலை காட்டிருவீங்க. இதுல இன்னும் நடிக்கலையே ரவி?’னு ரஜினி சார் கேட்டார். ‘சென்ட்டிமென்ட்டுக்கு வந்து நிக்கணும், அவ்வளவுதானே. நாளைக்குப் பின்னால நிக்கிற குரூப் டான்ஸர்ல நானும் ஒரு ஆள்’னு சொல்லிட்டேன். ‘அதெல்லாம் இல்லை. பாட்டுல ஒரு பிட் ஆடுறீங்க’ன்னார். ‘சரிவராது சார்’னு சொல்லிட்டு எடிட்டிங் போயிட்டேன்.

மறுநாள் ஸ்பாட்டுக்குப் போறேன், ‘சார்… உங்களை ரஜினி சார் காஸ்ட்யூம் மாத்திட்டு வரச் சொன்னார்’னு சொன்னாங்க. ஒண்ணும் புரியாம உள்ளே போய் பார்த்தா, அவர் காஸ்ட்யூம் இருந்துச்சு. ‘யோவ்… அவர் காஸ்ட்யூமை எதுக்கு என்கிட்ட தர்றீங்க?’னு சத்தம் போட்டேன். ‘இல்ல சார்… அவர் மாதிரியே உங்களுக்கும் காஸ்ட்யூம் பண்ணச் சொன்னார்’னு சொன்னாங்க. ஷூ, கோட், சூட்னு எல்லாம் அச்சு அசல் ரஜினி சார் காஸ்ட்யூம்.

‘சரி… இதுல இருந்து தப்பிக்க முடியாது’னு புரிஞ்சுபோச்சு. கொஞ்ச நேரம் ரிகர்சல் பண்ணேன். என்னையும் ரஜினி சாரையும் ஆடவெச்சு அந்த பி.ஜி.எம்-க்கு 12 டேக் எடுத்தாங்க. எனக்கு வியர்த்து விறுவிறுத்துடுச்சு. ஆனா, ரஜினி சார் கூலா நிக்கிறார். ‘ஃபர்ஸ்ட் டேக்கே ஓ.கே. சார்’னு சொல்றார் டான்ஸ் மாஸ்டர். ‘அப்புறம் எதுக்குய்யா 12 டேக் போனீங்க?’னு நான் மூச்சு வாங்க கேட்டேன். ‘நான் ஃபர்ஸ்ட் டேக்கே ஓ.கே. சொல்லிட்டேன். ரஜினி சார்தான் அமைதியா, ‘ஒன்மோர்… ஒன்மோர்’ சொல்லிட்டே இருந்தார்’னு சொன்னார் டான்ஸ் மாஸ்டர். ‘முழுப் படத்துலயும் எங்களைப் போட்டுக் கசக்கிப் பிழிஞ்சு எப்படி வேலை வாங்கினீங்க! அந்தக் கஷ்டம் உங்களுக்கும் புரியட்டும்னுதான் இப்படிப் பண்ணோம். ஃபர்ஸ்ட் டேக்கே சூப்பர். அதையே வெச்சுக்கலாம்’னு சிரிச்சுட்டே சொல்றார் ரஜினி சார்.  இதுதான் எனக்கு எதிரா ரஜினி செய்த முதல் சதி என அதிர்ச்சி அடைந்தவர் போல நடித்து காட்டினார்.

Leave a Reply