shadow

இளையதிலகம் பிரபுவின் 60வது பிறந்த நாள். ரஜினி, கமல் நேரில் வாழ்த்து

சிவாஜி கணேசனின் மகன் இளையதிலகம் தனது 60வது பிறந்த நாளை நேற்று தனது அன்னை இல்லத்தில் வெகுசிறப்பாக கொண்டாடினார். சிவாஜி குடும்பத்தின் ஒருவர் போல இதுநாள் வரை செயல்பட்டு கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அன்னை இல்லத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

பிரபுவுடன்  தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், சந்திரமுகி ஆகிய படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அதேபோல் கமல்ஹாசன், வெற்றி விழா, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் பிரபுவுடன் நடித்துள்ளார்.

மேலும் நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் உள்பட கோலிவுட்டின் முக்கிய நடிகர், நடிகையர் பல நேற்று அன்னை இல்லத்திற்கு சென்று பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply