ரஜினி, தனுஷ் இணையும் முதல் படம்: ஒரு ஆச்சரிய தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ அவரது திரைப்படங்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது

நேற்று ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆன நிலையில் விரைவில் அவர் நடிக்கயிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கருதப்படுகிறது

இந்த நிலையில் ’தலைவர் 169’ படம் குறித்த ஒரு செய்தி கசிந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தலைவர் 169’ படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளதாகவும் அதுமட்டுமின்றி அந்த படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் பரிசீலனை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் கேஎஸ் ரவிக்குமார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply