ரஜினியை இன்று சந்திக்கும் அஜித்: அரசியல் குறித்து பேச்சுவார்த்தையா?

ரஜினியை இன்று சந்திக்கும் அஜித்: அரசியல் குறித்து பேச்சுவார்த்தையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க இருக்கின்றது. இதற்காக ரஜினிகாந்த் இன்று ஹைதராபாத் செல்ல உள்ளார்

இந்தநிலையில் ஏற்கனவே அதே ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஜினி, அஜித் ஆகிய இருவரின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடப்பதால் இருவரும் இன்று சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த சந்திப்பின் போது இருவரும் அரசியல் இருவரும் பேச வாய்ப்பு இருப்பதாகவும், ரஜினியின் அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது அல்லது கட்சியில் இணைந்து செயல்படுவது குறித்து அஜித் பேசுவார் என்றும் கூறப்படுகிறது

வலிமையான இரண்டு திராவிட கட்சிகளையும் எதிர்க்க வேண்டிய நிலையை ரஜினிக்கு இருப்பதால் அஜித்தின் ஆதரவை ரஜினி நாடுவார் என்று தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் கோரிக்கைக்கு முடிவை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Leave a Reply