shadow

ரஜினி, அஜித் விஜய்யை இணைத்த ஜி.வி.பிரகாஷ்
gv prakash
நடிகராகவும் இசையமைப்பாளராகவும் கலக்கி வரும் ஜி.வி.பிரகாஷூக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது. அவருடைய லேட்டஸ்ட் வெற்றி ‘தெறி’ படத்தின் சூப்பர் ஹிட் ஆகும்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசரை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடவுள்ளார்.

‘ரஜினியின் ‘பாட்ஷால்’ படத்தின் புகழ்பெற்ற வசனத்தின் தலைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசரில் அஜித் மற்றும் விஜய் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கியுள்ளதாகவும், ஒரே படத்தில் ரஜினி, விஜய், அஜித்தை இணைத்த பெருமை ஜி.வி.பிரகாஷையே சாரும் என்றும் கூறப்படுகிறது.

லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகும் என தெரிகிறது.;

Leave a Reply