மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்த மேலும் ஒரு கட்சி!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏற்கனவே சரத்குமார் மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளது

பாமக நிர்வாகியாக இருந்த ராஜேஸ்வரி என்பவர் அக்கட்சியிலிருந்து விலகி அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற தனிக் கட்சியை கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கினார்

இந்த கட்சி தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

நேற்று கமல்ஹாசனை சந்தித்த ராஜேஸ்வரி மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் இந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் தகுதிகள் குறித்த விபரங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply