துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் சுயமானது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் சுயமானது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

கடந்த ஆண்டு துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தர்மயுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தன்னை வந்து சந்தித்து தனது அறிவுரையை கேட்ட பின்னர் தான் தர்மயுத்தம் தொடங்கினார் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

குருமூர்த்தியின் இந்த கருத்துக்கு பதில் கூறியுள்ள தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் சுயமானது என்றும் அதிமுகவின் பிரிவுக்கும், இணைப்புக்கும் அவரே காரணம் என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் கேட்டுக் கொண்டதால்தான் அதிமுகவில் மீண்டும் இணைந்தேன் மற்றும் துணை முதல்வர் பதவியேற்றேன் என்று ஓபிஎஸ் சமீபத்தில் கூறியிருந்த நிலையில் ஓபிஎஸ் சுயயமாக முடிவெடுத்தார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply