shadow

ரூ.100 கோடி மதிப்புள்ள தஞ்சை கோயிலின் சிலைகள் எங்கே? பரபரப்பு தகவல்

50 ஆண்டுகளுக்கு முன் திருட்டுபோன அரிய சிலைகளானா தஞ்சை பெரிய கோயிலில் இருந்த ராஜராஜ சோழன் மற்றுல் லோகமாதேவி சிலையும் வெளிமாநிலம் ஒன்றின் கண்காட்சியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் விரைவில் தமிழகம் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சிலை திருட்டு குறித்து நேற்று தஞ்சை எஸ்.பி செந்தில்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ராஜராஜன் சோழன் சிலை கோயில் வளாகத்தில் வடமேற்கு மண்டபத்தில் இருந்துள்ளது. இதற்கான ஆதாரங்களும், கல்வெட்டு குறிப்புகளும் இருக்கின்றன.

பஞ்ச லோகத்தில் செய்யப்பட்ட இந்த ராஜராஜசோழன் சிலை ரூ.60 கோடியும், லோகமாதேவி சிலை ரூ.40கோடியும் மதிப்பு கொண்டது. இந்த இரண்டு சிலைகளும் காணமல் போனது குறித்து முக்கியஸ்தர்கள் ஒருசிலர் புகார் அளித்ததன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கு பதிவும் செய்யபட்டுள்ளது. இந்த வழக்கை ஐகோர்ட் உத்தரவின்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளோம். அவர்கள் இது குறித்து விசாரணையை தொடர்வார்கள்” என்று கூறினார்.

இதுகுறித்து ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல், “சிலை காணாமல் போனது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். அதுமட்டுமின்றி குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்று கூறினார்.

Leave a Reply