இன்னும் 2 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் 2 மணிநேரத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை முதல் சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை, எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.