இன்று 8 மாவட்டங்கள், நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை

இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நாளை 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வரும் நிலையில் கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்பட 13 மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நாளை மீண்டும் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்பால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.