சென்னை உள்பட தமிழகத்தில் மழை:

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் பரவலாக நேற்று இரவு மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மேலும் ஏரிகள் குளங்கள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆண்டு விவசாயிகளுக்கும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று கூறப்பட்டு வருகிறது

அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக அதிக வெப்பம் இருந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தமிழகம் முழுவதும் குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது