shadow

இன்று எத்தனை மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் காற்றழுத்த சுழற்சி காரணமாக இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.