shadow

இன்னும் 3 மணி நேரத்தில் சென்னையில் கனமழை: வானிலை எச்சரிக்கை

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.