சென்னையில் மீண்டும் மழை: வானிலை எச்சரிக்கை

சென்னையில் மீண்டும் மழை: வானிலை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 30-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.