shadow

rain in chennaiசென்னையில் இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று பரவலாக 7 மி.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. அடையாறு, கே.கே.நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்தது.

வெப்பச்சலனம் காரணமாக சென்னை நகரில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சின்னகலார் பகுதியில் 4 செ.மீ., வால்பாறையில் 3 செ.மீ., நடுவட்டம், தேவலாவில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

Leave a Reply