shadow

சென்னையில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு நகரின் ஒருசில பகுதிகளில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்தது!

சென்னை மழை காரணமாக புழல் ஏரிக்கு நேற்று காலை 710 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 756 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது!

சோழவரம் ஏரிக்கு நேற்று 269 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 211 கனஅடியாக சரிந்தது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 351 மில்லியன் கனஅடியாக உள்ளது