shadow

33 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை அறிவிப்பு

சென்னை உள்பட 33 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட 33 மாவட்டங்களில் இன்று மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.