மீண்டும் பழைய கட்டணம் ஆனது பிளாட்பாரம் டிக்கெட்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் மீண்டும் பழைய கட்டணம் ஆகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் ரூபாய் 10 ரூபாயாக இருந்த பிளாட்பாரம் டிக்கெட் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் மீண்டும் பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.10 என குறைக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் மீண்டும் ரூபாய் பத்து ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது