அடுத்தடுத்து விபத்துக்கள்: பதவியை ராஜினாமா செய்கிறார் ரயில்வே அமைச்சர்

அடுத்தடுத்து விபத்துக்கள்: பதவியை ராஜினாமா செய்கிறார் ரயில்வே அமைச்சர்

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்கல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 23 பலியாகினர் என்பதும் பலர் காயம் அடைந்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று அதிகாலை 2.40 மணிக்கு அதே உத்தரபிரதேச மாநிலத்தில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகி 100 பேர் வரை காயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு ரயில் விபத்துக்களுக்க்கு முழு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முன்வந்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் நேரில் அளிக்க அப்பாயின்மெண்ட் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் பிரதமர் ரயில்வே அமைச்சரை பொறுமை காக்க கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Leave a Reply