shadow

railwayஇந்திய அரசின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ரயில்வே தனியார்மயமாக்கப்படவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு நேற்று பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, “ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை என்று கூறினார்.

புதுடில்லியில் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: “ரயில்வே துறையில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு அதன் செயல்பாடுகளை மேம்படுத்தி, துறையின் மதிப்பை உயர்த்துவதற்கான மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டுளோம்.

ஆனால் இந்த மாற்றங்களை விரும்பாத சிலர், ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படும் என்ற ஒரு பொய்யான வதந்தியை பரப்பி வருகின்றனர். ரயில்வே துறை மட்டுமின்றி மத்திய அரசின் கீழ் இயங்கும் எந்தவொரு துறையையும் தனியார்மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று கூறினார். குறிப்பாக விலை மதிப்புள்ள ரயில்வே துறையின் சொத்துகளை தனியார் வசம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் மேலும் கூறினார்.

மத்திய ரயில்வே அமைச்சரின் விளக்கத்தை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் உள்பட அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply