முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் திடீர் சோதனை: போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த 2016-2021ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த தங்கமணி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் தங்கமணிக்கு சொந்தமான சென்னை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 69 இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.