shadow

அமெரிக்காவுக்கு பாடம் படிக்க செல்கிறார் ராகுல்காந்தி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு தற்போது ஓய்வு நேரம் அதிகம் இருக்கின்றது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே இருப்பதால் அவருடைய கவனம் தற்போது படிப்பின் பக்கம் திரும்பியுள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் பயோடெக்னாலாஜி தொடர்பாக தெரிந்துகொள்வதற்காக நார்வே சென்ற ராகுல்காந்தி தற்போது அமெரிக்கா செல்லவிருக்கின்றார். அங்கு அவர் மனிதனைப் போன்று சிந்திக்கும் இயந்திரங்களின் உருவாக்கம் பற்றி அறிந்து கொள்ளவிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த இயந்திரங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து அவற்றின் மூலம் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வது, வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்வது போன்ற அபாயகர பணிகளை மேற்கொள்ள வைப்பதே ராகுல்காந்தியின் திட்டம் என்று கூறப்படுகிறது. அவரது திட்டம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்:

Leave a Reply