ராகுல் காந்தியை காணவில்லை! அமேதி போஸ்டரால் பரபரப்பு

ராகுல் காந்தியை காணவில்லை! அமேதி போஸ்டரால் பரபரப்பு

ஒரு தொகுதியின் எம்பி அல்லது எம்.எல்.ஏ, அந்த தொகுதியின் மக்களை கண்டுகொள்ளவில்லை என்றால் உடனே அவரை ‘காணவில்லை’ என்ற போஸ்டர் அடித்து மானத்தை வாங்கிவிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதுவரை இந்த நிலை பெரிய தலைவர்களுக்கு ஏற்பட்டதில்லை

ஆனால் தற்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் எம்.பி. தொகுதியான அமேதியில் `ராகுல் காந்தியை காணவில்லை’ என நேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில், `ராகுல் காந்தியை காணவில்லை. அமேதி தொகுதி எம்.பி ராகுல் காந்தி தொகுதிக்கு வருவதில்லை. அவர் வராத காரணத்தினால் அமேதி தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. அவர் அமேதி தொகுதி மக்களை அவமானப்படுத்தியுள்ளார், எங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளார். ராகுல் காந்தியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். இவன் அமேதி தொகுதி மக்கள்’ என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவரும், அமேதி தொகுதியின் எம்.பியான ராகுல் காந்தி கிட்டத்தட்ட ஒரு வருடமாக அமேதிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், `ராகுல் காந்தியை காணவில்லை’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply