நடந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள்:

சந்தித்து உதவி செய்த ராகுல் காந்தி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் எந்தவித வாகன போக்குவரத்தும் தற்போது செயல்படவில்லை

இதனை அடுத்து வெளிமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து செல்கிறார்கள்

இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து பேசியதுடன் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாகனங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஹரியானாவை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு செல்வதற்காக டெல்லி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்

அப்போது காங்கிரஸ் பிரமுகர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்து உணவு குடிநீர் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்

மேலும் காங்கிரஸ் சார்பில் வாகனங்களையும் ஏற்பாடு செய்து அந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்

ராகுல் காந்தியின் இந்த செயல் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது

Leave a Reply

Your email address will not be published.