மும்பை சென்றால் ராகுல்காந்தி நல்ல நடிகராகலாம்:

 பாஜக எம்.எல்.ஏ

ராகுல்காந்தி நல்ல நடிகர் என்றும், அவர் மும்பை சென்றால் பாலிவுட்டில் நல்ல நடிகராகலாம் என்றும் உ.பி., மாநிலம் பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உ.பி., மாநிலம் பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ சுரேந்திரசிங் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம். இந்த நிலைய்லி நேற்று அவர் பல்லியா என்னும் இடத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒரு நல்ல நடிகர் . அவர் அரசியலை விட்டு வெளியேறி மும்பைக்கு சென்றால் பாலிவுட்டில் சிறந்த நடிகராகலாம்.

நாங்கள் நாட்டை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். மக்கள் கொரோனாவைரஸ் காலத்தில் எப்படி சமூக இடைவெளி கடைபிடிக்க படுகிறதோ அதே போல் மக்கள் காங்கிரஸ் வாக்குகளை தூர விலக்கி கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

உ.பி., மாநிலம் பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ சுரேந்திரசிங்கின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply