ராகுல்காந்தியின் நள்ளிரவு பேரணியால் டெல்லியில் பரபரப்பு

ராகுல்காந்தியின் நள்ளிரவு பேரணியால் டெல்லியில் பரபரப்பு
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி திடீரென டெல்லி இந்தியா கேட் பகுதியில் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி ஒன்றை நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
ஜம்மு ஜாஷ்மீர் மாநிலத்தில் உள்ள  கத்துவா என்ற பகுதியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ளவரை விடுவிக்க கோரி அம்மாநில பா.ஜ.க மந்திரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போல உத்தரப்பிரதேசம் உனா நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார்.
இந்த சம்பவங்களை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.
இந்த பேரணியில் ராகுலில் சகோதரி பிரியங்கா வதேரா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்றனர். அப்போது காங்கிரசார் கூறுகையில், தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்பவே நள்ளிரவில் போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.
Rahul Gandhi candlelight march at delhi

Leave a Reply