shadow

கன்னியாகுமரி மக்களிடம் நேரில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி

சமீபத்தில் குமரி மாவட்டமே ஓகி புயல் காரணமாக நிலைகுலைந்து போயிருந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். குறிப்பாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் காணாமல் போய் அவர்களில் இன்னும் சிலர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் விரைவில் அமரவுள்ள ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரி பகுதிக்கு நேரில் வந்து புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களிடையே அவர் பேசியபோது, ‘ஓகி புயலால் மீனவர்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மீனவர்கள் பிரச்சனைக்காக குரல் எழுப்பப்படும்

மேலும் குஜராத் தேர்தலால் கன்னியாகுமரிக்கு வர இயலவில்லை. தாமதத்திற்கு மன்னிப்பு கோருகிறேன்’ என்று கூறியுள்ளார். ராகுல்காந்தியின் குமரி விசிட் அரசியல் களத்தில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply