shadow

rahul_gandhi_amethi_ap_338x225தேர்தல் வரவு செலவு கணக்கு வகைக்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி அமேதியில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவரது முகவரி சான்றிதழ் சரியில்லை என்று கூறி அவருடைய விண்ணப்பத்தை வங்கி நிர்வாகம் நிராகரித்துவிட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

வங்கி கணக்கு தொடங்க சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் முகவரி சான்றிதழ் சரியில்லை என்று கூறி அதிகாரிகள் அவரது விண்ணப்பதை நிராகரித்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வரும் ராகுல்காந்திக்கே முகவரி சரியில்லை என வங்கி நிர்வாகம் கூறுவது அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

ராகுல்காந்தியின் சான்றிதழ் அனைத்தும் சட்டப்படி சரியாகத்தான் இருக்கிறது. இது பாரதிய ஜனதா கட்சியின் சூழ்ச்சி என உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளர். ஆனால் ராகுல் காந்திக்கு அமேதியில் வீடு இருப்பதற்கோ, அல்லது  அவர் அங்கு தங்கியிருந்ததற்கான எந்த முக்கிய ஆதாரமும் இல்லை என்பதால்தான் அவரது விண்ணப்பத்தை தாங்கள் நிராகரித்ததாக வங்கி நிர்வாகம் விளக்கம் கூறியுள்ளது.

Leave a Reply