உங்க டாக்டர் பட்டம் எனக்கு தேவையில்லை. ராகுல் டிராவிட்

உங்க டாக்டர் பட்டம் எனக்கு தேவையில்லை. ராகுல் டிராவிட்

பெங்களூரு பல்கலைக்கழகம் அறிவித்த டாக்டர் பட்டத்தை பெற பிரபல கிரிக்கெட் வீரர் டிராவிட் மறுத்துள்ளார். படிக்காமல் கெளரவமாக கொடுக்கும் டாக்டர் பட்டம் தனக்கு தேவையில்லை என்றும் தன்னால் படித்து டாக்டர் பட்டம் வாங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கெளரவ டாக்டர் பட்டம் தேவையில்லை என்று ராகுல் டிராவிட் கூறியதை பெங்களூர் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு கர்நாடகாவைச் சேர்ந்த குலர்கா பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அந்த பட்டத்தை டிராவிட் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply