shadow

மோடி, ராகுல் வருகையால் சூடு பிடித்த கர்நாடக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திரமோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இன்று ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளதால் அம்மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் கர்நாடகத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு கலபுரகியிலும், மதியம் 3 மணிக்கு பல்லாரியிலும், மாலை 6 மணிக்கு பெங்களூரு கெங்கேரி அருகிலும் நடைபெறும் பா.ஜனதா பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மோடி பேசுகிறார்.

ஒருநாள் விட்டு ஒருநாள் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார். மொத்தம் 5 நாட்களில் 15 கூட்டங்களில் அவர் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும் 5 கூட்டங்களில் கலந்து கொள்ளவும் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கர்நாடகத்திற்கு வருகிறார். காலை 11.30 மணிக்கு பீதர் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவுரத் நகருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து பால்கி, உம்னாபாத் பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசுகிறார். பின்னர் பஸ்சில் பீதர் செல்லும் ராகுல்காந்தி அங்கு நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி பீதரில் தங்குகிறார். நாளை(வெள்ளிக்கிழமை) கலபுரகி, ஹாவேரி, கதக் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

கர்நாடகத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இன்று ஒரேநாளில் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

 

Leave a Reply