shadow

Mito-de-Rahu-e-Ketu
08.01.2016 முதல் 25.07.2017ஆ‌ம் தேதி வரையிலான  ராகு – கேது பெயர்ச்சி பொதுப் பலன் மற்றும் ராசிப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் அவர்கள் க‌ணி‌த்து‌க் கூறியுள்ளா‌ர்.

மேஷம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

 எதிலும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு புகழையும், கௌரவத்தையும், ஓரளவு பணப்புழக்கத்தையும் தந்தாலும் மறுபுறம் கடன் பிரச்னைகள், வீண் பகை என்றெல்லாம் கலங்கடிக்கவும் செய்த ராகு பகவான். இப்போது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல.. என்றாலும் உங்கள் யோகாதிபதி சூரியனின் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து நல்லதையே செய்வார். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி இனி சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் நிலவி வந்தப் பனிப்போர் விலகும். அன்யோன்யம் அதிகரிக்கும்.
 
புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் ராகு அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். மற்றவர்களை எப்போதுமே சந்தேகக் கண்ணுடன் பார்க்காதீர்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். அவ்வப்போது குறைகளை கண்டுப்பிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள்.
 
உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு சிலர் பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவர்கள் உங்களுக்கு எதிரானவர்களிடம் சென்று சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமூகமாக தீர்க்கப் பாருங்கள். கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. அவர் கூடாப்பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
 
மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். பழைய கடனை நினைத்து பயம் வந்துப் போகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். என்றாலும் வி.ஐ.பிகளின் தொடர்புகள் கிடைக்கும்.
 
நீண்ட நாளாக போக வேண்டுமென்று நினைத்திருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். வேற்றுமதத்தவர்கள், பிற மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பூர்வீக சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளிவருவீர்கள். வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்களின் பூர்வ புண்யாதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் மாறுபட்ட யோசனைகள் உதயமாகும். வீட்டில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடைபெறும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். அவர்களின் கல்வி, வேலை, திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியடையும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.
 
ராகு பகவான் உங்கள் தன-சப்தமாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். விலகிச் சென்ற சொந்தம்-பந்தங்களும் இனி தேடி வருவார்கள். நெடுநாள் கனவான இருந்த வீடு, வாகனம் வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் எதிலும் நம்பிக்கையின்மை, சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், இழப்புகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மனக்கசப்புகள் வந்து நீங்கும். உடம்பில் இரும்புச் சத்துக் குறைப்பாடு ஏற்படக்கூடும். கை, கால் மரத்துப் போகும். பண விரையங்களும் வரும்.
 
கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். நல்லவர்களின் நட்பால் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோருக்கு எதிராக எதுவும் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோருடன் இல்லையென்றாலும் சகோதரங்களுடன் பகிர்ந்துக் கொள்வது நல்லது. உயர்கல்வியில் சேரும் போது உங்களுக்கு ஏற்ற சரியான பிரிவை தேர்ந்தெடுப்பது நல்லது. உங்களுடைய கல்வி தகுதிக் கேற்ப நல்ல வேலையும் கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதிப்பாருங்கள். பொழுது போக்குகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே! இசை, ஓவியம், கட்டுரைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடி சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 
அரசியல்வாதிகளே! தலைமையை பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அண்டை அயலாருடன் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
 
கலைத்துறையினரே! சின்ன சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
 
விவசாயிகளே! வண்டுக்கடி, பூச்சி மற்றும் எலித் தொல்லை நீங்கி மகசூல் கூடும். தானிய வகைகள், மூலிகை வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள்.
 
வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். ஆனால் முன்பின் அனுபவமில்லாத தொழிலில் சிலரின் தவறான அறிவுரையால் முதலீடு செய்து நட்டப்பட வேண்டாம். நண்பர்களின் உதவியுடன் கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். பிளாஸ்டிக், மூலிகை, துரித உணவகம், எண்டர்ப்ரைசஸ் வகைகளால் லாபமடைவீர்கள். அரசாங்க கெடுபிடிகள் வந்துப் போகும். பங்குதாரர்களுடன் அனுசரித்துப் போங்கள்.
 
உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு திடீர் பயணங்களையும், வீண் அலைக்கழிப்புகளையும், தூக்கமின்மையையும், அநவாசியச் செலவினங்களையும் தந்த கேது பகவான் இப்போது லாப வீடான 11-ம் வீட்டில் வந்தமர்கிறார். தள்ளிப் போன தடைப்பட்ட காரியங்களெல்லாம் இனி முடிவடையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். ஆன்மிகவாதிகள், சாதுக்களின் நட்பால் தெளிவடைவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
 
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்யம் உண்டாகும். ஷேர் மூலமாக பணம் வரும். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள். கோபம் குறையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் யோகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் தொட்ட காரியம் துலங்கும். வீட்டில் மங்கள இசை முழங்கும். பெரிய பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் வீண் டென்ஷன், முன்கோபம், எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பணப்பற்றாக்குறை, ஈகோப் பிரச்னைகள் வந்துச் செல்லும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட்டு சிக்க வேண்டாம். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்த்துவிடுங்கள். அவசர முடிவுகள் வேண்டாம்.
 
உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். சகோதரங்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அழகு, ஆரோக்யம் கூடும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வாகனம் வாங்குவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
 
வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தடையின்றி கிடைக்கும்.
 
இந்த ராகு-கேது மாற்றம் ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகாலாக இருந்த உங்களை திடப்படுத்தி, தீர்க்கமான முடிவுகளை எடுக்க வைப்பதாகவும், பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.
 
பரிகாரம்:
 
திருப்பூருக்கு அருகிலுள்ள அவினாசியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபெருங்கருணையம்மை உடனுறை ஸ்ரீ அவினாசீச்சுரரை ஏதேனும் ஒரு திங்கட் கிழமைகளில் சென்று வணங்குங்கள். தகப்பனில்லாப் பிள்ளைக்கு உதவுங்கள்.

ரிஷபம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

நாட்டு நடப்பை நன்கு அறிந்தவர்களே! உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து அடுக்கடுக்கான பிரச்னைகளையும், வீண் குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார். ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் எத்தனையோ மருத்துவரை அணுகி மருந்து, மாத்திரை உட்கொண்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும்.
 
இனி குடும்ப சூழ்நிலையறிந்துப் பொறுப்பாக நடந்துக் கொள்ளத் தொடங்குவார்கள். மகன் கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார். அவருக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். மகளுக்காக வரன் தேடி அலைந்தீர்களே! உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணமகன் அமைவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
 
பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். நட்பு வட்டம் விரிவடையும். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு இரத்த அழுத்தம், நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். வீட்டில் கழிவு நீர் மற்றும் குடி நீர் குழாய் அடைப்பு ஏற்படக்கூடும்.
 
அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது ஆர்.சி.புக், லைசன்சை மறக்காதீர்கள். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். சொந்த வாகனத்தில் இரவு நேரத்தில் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:0
 
உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்.
 
ராகுபகவான் உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் சோம்பல் நீங்கி உற்சாகமடைவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். பணப்பற்றாக்குறை விலகும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். என்றாலும் தொண்டை வலி, சளித் தொந்தரவு, தோலில் நமைச்சல் வந்துச் செல்லும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 ராகுபகவான் செல்வதால் மன இறுக்கம், காரியத் தடங்கல், வீண் சச்சரவு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், தோலில் நமைச்சல், எதிர்பாராத பயணங்கள் வந்துச் செல்லும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். மற்றவர்களிடம் எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.
 
கன்னிப்பெண்களே! பெற்றோரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். பழைய நண்பர்களை புறக்கணிக்க வேண்டாம். கல்யாண விஷயத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். டி.வி. பார்க்கும் நேரத்தை குறைப்பது நல்லது. கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். வகுப்பறையில் அரட்டை பேச்சை தவிர்த்து விட்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள்.
 
அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். கோஷ்டி அரசியலில் ஈடுபடாதீர்கள். தலைமைக்கு கட்டுப்படுவது நல்லது. வழக்கில் சிக்கி கொள்ளாதீர்கள்.
 
கலைத்துறையினரே! உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்களால் நல்லது நடக்கும். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள்.
 
விவசாயிகளே! சொத்துப் பிரச்சனைகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு மகசூலை அதிகப்படுத்த முயற்சி எடுங்கள். எலித்தொல்லை, பூச்சித் தொல்லைகள் வரக்கூடும். வற்றிய கிணறு சுரக்கும். தென்னை, வாழை, சவுக்கு வகைகளால் லாபமடைவீர்கள்.
 
வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். போட்டிகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.
 
சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொண்டு புது முயற்சிகளோ, முடிவுகளோ செய்யப்பாருங்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். திடீரென்று அறிமுகமாகி கொஞ்ச காலம் பழகியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
 
உத்யோகத்தில் உங்களைப் பாரபட்சமாக நடத்திய அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள். உங்களை நம்பி ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்குமளவிற்கு மூத்த அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சம்பளம் உயரும். சக ஊழியர்களால் சின்ன சின்ன பிரச்னைகள் தலைத்தூக்கினாலும் சாதுர்யமாகப் பேசி சரி செய்வீர்கள். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களுடைய ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு காரிய வெற்றியையும், பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்று தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். ஒற்றையாக இருந்து எவ்வளவு தான் போராடுவது, எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி கஷ்டப்படுவது என்ற ஒரு ஆதங்கமும் அவ்வப்போது வெளிப்படும்.
 
உங்களுடைய திறமைகளை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் போகும். கௌரவக் குறைவான சம்பவங்களோ அல்லது தலைக்குனிவான சம்பவங்களோ நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் வந்துப் போகும். உங்களுக்கு எதிரானவர்களில் சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்புவார்கள்.
 
யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ரோட்டரி கிளப், ட்ரஸ்டு போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைந்து பொது சேவைகளில் ஈடுபடுவீர்கள். மாற்றுமொழியினரால் உதவிகள் உண்டு. மேற்கொண்டு உங்களுடைய கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். மறைமுகமாக செயல்பட்டவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் சில நேரங்களில் வெறுமையை உணருவீர்கள். ஒருவித பதட்டம், பயம் அடிமனதிலே தோன்றி மறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தப்பாருங்கள். எடுத்தோம், கவிழ்தோம் என்றெல்லாம் அவசரப்பட்டு பேசி விட்டு பிறகு அவஸ்தை படாதீர்கள். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பீட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. குடும்பத்தில் சின்ன சின்ன சலசலப்புகள் வரும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகமாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் ஏமாற்றுவதாக நினைத்துப் புலம்புவீர்கள்.
 
உங்கள் சப்தம-விரையாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் சகோதரங்களால் பண உதவிகள், பொருளுதவிகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். என்றாலும் திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். கனவுத் தொல்லையால் அவ்வப்போது தூக்கம் குறையும். புகழ் பெற்ற அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
 
வியாபாரம் சுமாராக இருக்கும். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகள் கொள்முதல் செய்யும் போது கவனம் தேவை. சந்தை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். உத்யோக ஸ்தானமான 10-ம் வீட்டில் கேது அமர்வதால் உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்த்தாலும் நிர்வாகத்திடமிருந்து பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லையேயென ஆதங்கப்படுவீர்கள்.
 
அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். அலுவலகத்தில் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
இந்த ராகு-கேது மாற்றம் கட்டுக்கடங்காத செலவுகளையும், கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளினாலும், மற்றொரு பக்கம் ஓரளவு நிம்மதியையும், மகிழச்சியையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்
 
திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ, தொலைவில் உள்ள திருக்கண்ணங்குடி எனும் ஊரில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரரை ஏதேனும் ஒரு திரயோதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். மூடை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

ரிஷபம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

நாட்டு நடப்பை நன்கு அறிந்தவர்களே! உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து அடுக்கடுக்கான பிரச்னைகளையும், வீண் குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார். ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் எத்தனையோ மருத்துவரை அணுகி மருந்து, மாத்திரை உட்கொண்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும்.
 
இனி குடும்ப சூழ்நிலையறிந்துப் பொறுப்பாக நடந்துக் கொள்ளத் தொடங்குவார்கள். மகன் கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார். அவருக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். மகளுக்காக வரன் தேடி அலைந்தீர்களே! உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணமகன் அமைவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
 
பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். நட்பு வட்டம் விரிவடையும். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு இரத்த அழுத்தம், நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். வீட்டில் கழிவு நீர் மற்றும் குடி நீர் குழாய் அடைப்பு ஏற்படக்கூடும்.
 
அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது ஆர்.சி.புக், லைசன்சை மறக்காதீர்கள். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். சொந்த வாகனத்தில் இரவு நேரத்தில் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:0
 
உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்.
 
ராகுபகவான் உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் சோம்பல் நீங்கி உற்சாகமடைவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். பணப்பற்றாக்குறை விலகும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். என்றாலும் தொண்டை வலி, சளித் தொந்தரவு, தோலில் நமைச்சல் வந்துச் செல்லும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 ராகுபகவான் செல்வதால் மன இறுக்கம், காரியத் தடங்கல், வீண் சச்சரவு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், தோலில் நமைச்சல், எதிர்பாராத பயணங்கள் வந்துச் செல்லும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். மற்றவர்களிடம் எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.
 
கன்னிப்பெண்களே! பெற்றோரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். பழைய நண்பர்களை புறக்கணிக்க வேண்டாம். கல்யாண விஷயத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். டி.வி. பார்க்கும் நேரத்தை குறைப்பது நல்லது. கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். வகுப்பறையில் அரட்டை பேச்சை தவிர்த்து விட்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள்.
 
அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். கோஷ்டி அரசியலில் ஈடுபடாதீர்கள். தலைமைக்கு கட்டுப்படுவது நல்லது. வழக்கில் சிக்கி கொள்ளாதீர்கள்.
 
கலைத்துறையினரே! உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்களால் நல்லது நடக்கும். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள்.
 
விவசாயிகளே! சொத்துப் பிரச்சனைகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு மகசூலை அதிகப்படுத்த முயற்சி எடுங்கள். எலித்தொல்லை, பூச்சித் தொல்லைகள் வரக்கூடும். வற்றிய கிணறு சுரக்கும். தென்னை, வாழை, சவுக்கு வகைகளால் லாபமடைவீர்கள்.
 
வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். போட்டிகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.
 
சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொண்டு புது முயற்சிகளோ, முடிவுகளோ செய்யப்பாருங்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். திடீரென்று அறிமுகமாகி கொஞ்ச காலம் பழகியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
 
உத்யோகத்தில் உங்களைப் பாரபட்சமாக நடத்திய அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள். உங்களை நம்பி ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்குமளவிற்கு மூத்த அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சம்பளம் உயரும். சக ஊழியர்களால் சின்ன சின்ன பிரச்னைகள் தலைத்தூக்கினாலும் சாதுர்யமாகப் பேசி சரி செய்வீர்கள். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களுடைய ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு காரிய வெற்றியையும், பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்று தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். ஒற்றையாக இருந்து எவ்வளவு தான் போராடுவது, எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி கஷ்டப்படுவது என்ற ஒரு ஆதங்கமும் அவ்வப்போது வெளிப்படும்.
 
உங்களுடைய திறமைகளை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் போகும். கௌரவக் குறைவான சம்பவங்களோ அல்லது தலைக்குனிவான சம்பவங்களோ நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் வந்துப் போகும். உங்களுக்கு எதிரானவர்களில் சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்புவார்கள்.
 
யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ரோட்டரி கிளப், ட்ரஸ்டு போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைந்து பொது சேவைகளில் ஈடுபடுவீர்கள். மாற்றுமொழியினரால் உதவிகள் உண்டு. மேற்கொண்டு உங்களுடைய கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். மறைமுகமாக செயல்பட்டவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் சில நேரங்களில் வெறுமையை உணருவீர்கள். ஒருவித பதட்டம், பயம் அடிமனதிலே தோன்றி மறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தப்பாருங்கள். எடுத்தோம், கவிழ்தோம் என்றெல்லாம் அவசரப்பட்டு பேசி விட்டு பிறகு அவஸ்தை படாதீர்கள். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பீட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. குடும்பத்தில் சின்ன சின்ன சலசலப்புகள் வரும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகமாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் ஏமாற்றுவதாக நினைத்துப் புலம்புவீர்கள்.
 
உங்கள் சப்தம-விரையாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் சகோதரங்களால் பண உதவிகள், பொருளுதவிகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். என்றாலும் திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். கனவுத் தொல்லையால் அவ்வப்போது தூக்கம் குறையும். புகழ் பெற்ற அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
 
வியாபாரம் சுமாராக இருக்கும். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகள் கொள்முதல் செய்யும் போது கவனம் தேவை. சந்தை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். உத்யோக ஸ்தானமான 10-ம் வீட்டில் கேது அமர்வதால் உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்த்தாலும் நிர்வாகத்திடமிருந்து பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லையேயென ஆதங்கப்படுவீர்கள்.
 
அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். அலுவலகத்தில் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
இந்த ராகு-கேது மாற்றம் கட்டுக்கடங்காத செலவுகளையும், கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளினாலும், மற்றொரு பக்கம் ஓரளவு நிம்மதியையும், மகிழச்சியையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்
 
திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ, தொலைவில் உள்ள திருக்கண்ணங்குடி எனும் ஊரில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரரை ஏதேனும் ஒரு திரயோதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். மூடை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

கடகம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

கள்ளம் கபடமற்ற பேச்சால் கவர்பவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் 08.01.2016 முதல் 25.07.2017 வரை உங்களுக்கு என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு புதிய மாற்றங்களையும், தைரியத்தையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படப்பாருங்கள். வாக்கு ஸ்தானத்தில் ராகு அமர்வதால் எடுத்தோம், கவிழ்தோம் என்றெல்லாம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொண்டு உங்களை விமர்சிப்பார்கள்.
 
எனவே வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். சில வேலைகள் தடைப்பட்டு முடிவடையும். ஓரு பக்கம் பணம் வந்தாலும் மற்றொரு பக்கம் அதற்கு தகுந்த செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். கண், காது, பல் வலி வந்துப் போகும். காலில் அடிப்படி வாய்ப்பிருக்கிறது. கண்ணில் சின்னதாக ஒரு தூசு விழுந்தால் அலட்சியமாக விட்டு விடாமல் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
 
சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. அவ்வப்போது தர்ம சங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது வீட்டை பாதுகாப்பாக பூட்டிச் செல்லவது நல்லது. ஏனெனில் களவுப் போக வாய்ப்பிருக்கிறது. கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.
 
உறவினர்களில் ஒரு சிலர் கூட நீங்கள் மாறி விட்டதாக கூறுவார்கள். முன்பு போல அவர் இல்லை. இப்போதெல்லாம் கோபப்படுகிறார் என்றெல்லாம் குற்றப்பத்திரிக்கை வாசிப்பார்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வந்துப் போகும்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் தனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் அறிவுப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த வகையில் பண உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்யம் சீராகும். கல்யாண முயற்சிகள் சாதகமாக முடியும். வேற்றுமதத்தவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
 
ராகுபகவான் உங்கள் சுக-லாபாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். புது வேலை அமையும். வங்கிக் கடன் கிடைத்து கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் முடியும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல அவ்வப்போது இருப்பீர்கள். யாராக இருந்தாலும் நெருங்கிப் பழகுவதை தவிர்க்கவும்.
 
மாணவ-மாணவிகளே! மறதியால் மதிப்பெண் குறையும். நெருக்குத் தீணிகளை குறையுங்கள். அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. விளையாடும் போது சின்ன சின்ன காயங்கள் ஏற்படக்கூடும்.
 
கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். இரவில் நேரங்களில் அதிகம் கண் விழித்திருக்க வேண்டாம். கண்ணுக்கு கீழ் கரு வளையம் உண்டாகும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள்.
 
அரசியல்வாதிகளே! கட்சியில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், மற்றொரு சாரர் உங்களுக்கு எதிராகவும் செயல்படுவார்கள். உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள்.
 
கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள், கிசுகிசுகள் வந்தாலும் விரக்தியடையாதீர்கள். சுய விளம்பரத்தை விட்டு விடுங்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.
 
விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். வற்றிய கிணற்றில் நீர் ஊற கொஞ்சம் செலவு செய்து தூர் வார்வீர்கள். அக்கம்-பக்கத்து நிலத்துக்காரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
 
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, கெமிக்கல், ஆட்டோ-மொபைல் வகைகளால் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களால் விரயம் வரும். இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்.
 
யாருக்கும் கடன் தர வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்வீர்கள். பங்குதாரர்களால் அவ்வப்போது பிரச்னைகள் வெடிக்கும். சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தர வாய்ப்பிருக்கிறது.
 
உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த அதிகாரிகள் ஒருசில விஷயங்களை செய்யச் சொல்லி வற்புறுத்தினாலும் சட்டத்திற்கு புறப்பாக நீங்கள் எதையும் செய்துக் கொண்டிருக்காதீர்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்துக் கொண்டு தந்தையாருடன் மோதல்களையும், அவருக்கு ஆரோக்ய குறைவையும், வரவுக்கு மிஞ்சிய செலவுகளை தந்துக் கொண்டிருந்த கேதுபகவான் இப்போது ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். தந்தையாருடனான மனவருத்தம், மருத்துவச் செலவுகள் யாவும் நீங்கும்.
 
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். என்றாலும் குடும்பத்தில் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். அதேப் போல பிரச்னைகளை அடுக்கி வைத்துக் கொள்ளாதீர்கள்.
 
எதைத்தொட்டாலும் பிரச்சனை என்றெல்லாம் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து சில முடிவுகள் எடுக்கப்பாருங்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக பயன்படுத்துங்கள். வாகனத்தில் செல்லும் போது நிதானம் அவசியம். அரசு காரியங்கள் இழுபறியாகும். திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது. சில நேரங்களில் சில இடங்களில் வாக்குத் தவற வேண்டி வரும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சஷ்டம-பாக்யாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாதியிலேயே நின்று போன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். குழந்தை பாக்யம் உண்டாகும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேது செல்வதால் சோம்பல், களைப்பு, ஏமாற்றம், பிறர்மீது நம்பிக்கையின்மை, பிரபலங்களுடன் பகைமை, வாழ்க்கை மீது ஒருவித கசப்புணர்வுகள் வந்துச் செல்லும். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டுமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.
 
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். புது பொறுப்புகளுக்கு தேர்தெடுக்கப்படுவீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
 
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உங்களைப் பற்றி அவதூறானக் கடிதங்கள் உங்களை விமர்சித்து வரக் கூடும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாலும் புது அதிகாரியின்  நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள்.
 
இந்த ராகு-கேது மாற்றம் நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக் கொடுப்பதுடன், பணத்தின் அருமையை புரிய வைப்பதாகவும் சகிப்புத் தன்மையால் கொஞ்சம் வளர்ச்சியையும் தரும்.
 
பரிகாரம்:
 
திருவாரூரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீஅல்லியங்கோதையம்மை உடனுறை ஸ்ரீபுற்றிடங்கொண்டாரை தேய்பிறை பிரதமை திதி நாளில் சென்று வணங்குங்கள். தொழு நோயாளிக்கு உதவுங்கள்.

சிம்மம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

எதிலும் புதுமையைப் புகுத்தும் நீங்கள் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்துக் கொண்டு வீண் வாக்குவாதங்களையும், பணப்பற்றாக்குறையையும், குடும்பத்தில் பிரச்னைகளையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் இனி இடம், பொருள் ஏவலறிந்து பேசும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள்.
 
பிரச்னைகள் வெகுவாக குறையும். மற்றவர்களின் உள்மனதையும் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணமும் கைக்கு வரும். ஆனால் உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உடம்பில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக் குறைய வாய்ப்பிருக்கிறது.
 
எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பாரம்பரிய உணவுகளை உட்கொள்வது கொள்வது நல்லது. செரிமானக் கோளாறு, சிறுநீர் பாதையில் அழற்சி, வயிற்று உப்புசம், வாய்ப்புண் வந்துச் செல்லும். விளம்பரங்களை கண்டு சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தும் ஷாம்பு, சோம்பு, வசனை திரவியங்களை வாங்கி ஏமாற வேண்டாம்.
 
அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். இரத்தக் கொதிப்பு அதிகமாகும். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அல்சர் வர வாய்ப்பிருக்கிறது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். குடும்பத்திலும் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அடிக்கடி மன அழுத்தங்களும் வரக்கூடும்.
 
மற்றவர்களை நம்பி புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விஷப் பூச்சிகளான பாம்பு, பூரான் கடிக்க வாய்ப்பிருக்கிறது. இ-மெயில் மற்றும் மொபைல் ஃபோனில் வரும் பரிசுத் தொகை அறிவிப்புகளை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். உங்கள் இளமைக் காலத்துடன் அவர்களை ஒப்பட்டுப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் ராசிநாதன் சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு உயரும். பழைய வீட்டை இடித்து கட்டுவீர்கள். என்றாலும் வேனல் கட்டி, உடல் உஷ்ணம் வந்தச் செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வரும். உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மனஇறுக்கம், வீண் டென்ஷன், அலைச்சல் வந்துப் போகும்.
 
ராகுபகவான் உங்களின் சேவகாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் வீட்டிற்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. தைரியம் கூடும். புது முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வீடு அமையும். என்றாலும் இக்காலக்கட்டங்களில் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வீண் பழி, வதந்திகள், அசதி, காரியத் தாமதம் வந்துச் செல்லும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மின்சாரம், கத்திரிக் கோள், நக வெட்டியை கவனமாக கையாளுங்கள். முன்பின் அறியாதவர்கள் நயமாகப் பேசுகிறார்கள் என்று நம்பி குடும்ப அந்தரங்க விஷயங்களையோ, தன் சொந்த விஷயங்களையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். இக்காலக்கட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்கள் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.
 
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். மறதி உண்டாகும். தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமிருந்தால் மட்டும் போதாது, அதற்கான உழைப்பும் இருக்க வேண்டும். உண்மையான நண்பர்களை உணர்ந்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும். சிலர் வெளியூர் அல்லது வெளி மாநிலத்தில் விடுதியில் தங்கி படிக்க வேண்டி வரும்.
 
கன்னிப் பெண்களே! ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். கல்யாணம் தள்ளிப் போய் முடியும். பெற்றோரின் அறிவுரைக்கு முக்கியத்துவம் தாருங்கள். எல்லாம் எனக்குத் தெரியும் என்று மெத்தனமாக இருக்க வேண்டாம். மாதவிடாய்க் கோளாறு, ஹார்மோன் பிரச்னைகள் வந்துச் செல்லும்.
 
அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றி குறை கூறவேண்டாம். சகாக்களிடம் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கோஷ்டி பூசலாலும், எதிர்கட்சியினராலும் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
 
கலைத்துறையினரே! உங்கள் படைப்பிற்கு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். கிசுகிசு தொல்லைகளால் டென்ஷனாவீர்கள்.
 
விவசாயிகளே! அகலக் கால் வைத்து கடன் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். காட்டு வெள்ளாமை வீட்டிற்கு வரும் வரை எதுவும் நிலையில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.
 
வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். மற்றவர்களின் பேச்சை கேட்டு முன்பின் அனுபவமில்லாத தொழிலில் முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ள வேண்டாம். கடையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வேலையாட்களை விரட்டாதீர்கள்.
 
அண்டை மாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். அரசாங்கத்தை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். அக்கம்-பக்கம் கடைக்காரருடன் சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களுடன் சச்சரவுகள் வரும். மர வகைகள், ஊதுபத்தி, உணவு, போடிங், லாட்ஜிங், கமிஷன் லாபமடைவீர்கள். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் என செல்லாமல் முடிந்தவரை பேசி தீர்ப்பது நல்லது.
 
உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் ஆறுதலடைவீர்கள். ஆனால் எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள் அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள பாக்கியையும் போராடி பெறுவீர்கள்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் அமர்ந்துக் கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும், விரக்தியையும் தந்துக் கொண்டிருந்த கேது இப்போது ராசிக்கு 7-ல் அமர்வதால் இனி விபத்துகள், ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். எப்போது பார்த்தாலும் எந்த நேரம் எப்படி பிரச்னை வருமோ என்ற ஒரு புயல் மனதில் வீசிக் கொண்டிருந்தே இனி அமைதியாவீர்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள்.
 
உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பார்த்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள். ஆனால் களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்-மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள்.
 
பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைக்கூர்ந்து பேசாதீர்கள். அதன் மூலமாக இருவருக்குள்ளும் பிரச்னைகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். மனைவி உரிமையுடன் எதையாவது பேசினால் அதை லென்ஸ் வைத்து பார்த்து தப்புக் கண்டு பிடிக்காதீர்கள். மனைவியின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். முதுகு எலும்புத் தோய்வு, பித்தப் பையில் கல், கர்பப்பையில் நீர் கட்டிகள் வரக்கூடும்.
 
சின்ன சின்ன அறுவை சிகிச்சைகளும் வந்துப் போகும். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. கல்யாண முயற்சிகள் தாமதமாகும். வங்கிக் கடனை நினைத்தும் கலங்குவீர்கள்.
 
வெளியில் தைரியசாலியாக உங்களைக் காட்டிக் கொண்டாலும், உள்மனதில் ஒருவித பயம் பரவும். தன்னம்பிக்கை குறையும். நெருக்கமாக பழகிய ஒருசிலர் கொஞ்சம் ஒதுங்கி செல்வார்கள். பலர் பயன்படுத்திக் கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் அலுத்துக் கொள்வீர்கள்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்- அஷ்டமாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
 
பூர்வீக சொத்தை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லைகள் குறையும்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களை ஒவ்வொன்றாக சரி செய்துக் கொள்ளப்பாருங்கள். எல்லாப் பிரச்னைகளுக்கும் மற்றவர்களை நீங்கள் காரணம் கூறுவது அவ்வளவு நல்லதல்ல.
 
இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே உங்களுடைய அடிப்படை நடத்தைக் கோலங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.
 
உங்கள் சுக-பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்களின் கோபம் குறையும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். தாயாரின் உடல் நலம் சீராகும். தாய்வழி சொத்துகளைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
 
வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிவீர்கள். வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். புது ஏஜென்சிகளை யோசித்து ஏற்பது நல்லது. கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.
 
உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் திறமையை சோதிப்பார்கள். வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள்.
 
இந்த ராகு-கேது மாற்றம் அவ்வப்போது சின்ன சின்ன நட்டங்களையும், எதிர்பார்ப்புகளை அடைவதில் தடைகளை ஏற்படுத்தினாலும் தொலைநோக்குச் சிந்தனையாலும், வாக்குச் சாதுர்யத்தாலும் எதையும் சமாளிக்க வைக்கும்.
 
பரிகாரம்
நாகபட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையுள்ள கீழையூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅதிரூபவல்லித் தாயார் உடனுறை கீழரங்கன் எனும் ஸ்ரீசேஷசயன பெருமாளை திருவோணம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.

கன்னி: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

Last Modified: சனி, 26 டிசம்பர் 2015 (16:12 IST)

மன்னிக்கும் குணம் உள்ள நீங்கள், செய்நன்றி மறவாதவர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் என்ன பலன் தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துக் கொண்டு திக்கு திறையறியாது திண்டாட வைத்தார். காரண காரியமே இல்லாமல் பிரச்னைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்தாரே! வாழ்க்கை மீதும் ஒரு வெறுப்பை உண்டாக்கி இது என்ன செக்கு மாட்டு வாழ்க்கை என்று புலம்ப வைத்தாரே! முகத்தில் ஒரு மலர்ச்சியே இல்லாமல் ஒரு நிமிடம் சிரித்தாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அழ வைத்தாரே! அப்படிப்பட்ட ராகுபகவான் இப்போது உங்கள் ஜென்ம ராசியை விட்டு விலகி 12-ம் விட்டிற்குள் இடம் பெயர்கிறார்.
 
எனவே முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். எப்போதும் சோகம் படர்ந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை தவழும். சோர்வு, களைப்புடன் காணப்பட்டீர்களே! இனி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மாதக் கணக்கில், வாரக் கணக்கில் தள்ளிப் போன தடைப்பட்ட காரியங்களையெல்லாம் முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள்.
 
குடும்பத்திலும் நீங்கள் நல்லதே சொன்னாலும் உங்கள் பேச்சு சபை ஏறாமல் அவமதிக்கப்பட்டீர்களே! இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். நேர்மறை எண்ணங்கள் உருவாகும். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.
 
எதிர்தரப்பினர் வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். என்றாலும் ராகு விரையஸ்தானமான 12-ல் மறைவதால் எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். வீண் அலைக்கழிப்புகளும் இருக்கத்தான் செய்யும். நீங்கள் ஒரு பட்ஜெட் போட்டு இதற்குள் முடிக்க வேண்டுமென்று நினைத்தால் முடியாமல் இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும். அவ்வப்போது கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.
 
எவ்வளவும் பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருந்தக் கொண்டேயிருக்கும். சாதுக்கள், சித்தர்களின் சந்திப்பு நிகழும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் விரையாதிபதி சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். மறதியால் விலை உயர்ந்த நகை, செல்போனை இழக்க நேரிடும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன் தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.
 
ராகுபகவான் உங்கள் தன-பாக்யாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் தொட்ட காரியம் துலங்கும். பணப்புழக்கம் அதிகமாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். வீடு, வாகன வசதிப் பெருகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல மனப்பெண் அமைவாள். வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் மனஅழுத்தம், சின்ன சின்ன இழப்புகள், விபத்துகள் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். உத்யோகத்தில் அனுசரித்துப் போவது நல்லது. பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு கவலைகள் வந்து நீங்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
 
கன்னிப்பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். மொழி அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
 
மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டி, பொறாமையுடன் பழகிய சக மாணவர்களில் சிலர் வலிய வந்து பேசுவார்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். விரும்பிய கோர்ஸில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள்.
 
கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். மூத்த கலைஞர்களை விட அறிமுக கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள்.
 
விவசாயிகளே! விளைச்சல் ரெட்டிப்பாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேர்கடலை, நெல், சூரிய காந்தி மற்றும் உளுந்து வகைகளால் லாபமடைவீர்கள். ஊரில் மரியாதைக் கூடும்.
 
வியாபாரத்தில் குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்புக் கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள்.
 
வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்துக் கொள்வீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். துரித உணவு, கம்பியூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, ஸ்க்ராப் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சில கூடுதல் சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலர் அதிக சம்பளத்துடன் புது வேலையில் சென்று அமருவீர்கள். பதவி உயர்விற்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  
   
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு கணவன்-மனைவிக்குள் பிரிவையும், திறமைக்கு அங்கீகாரமின்மையையும் ஏற்படுத்திய கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வருமானம் உயரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.
 
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காது குத்தி போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
 
அரசு காரியங்கள் விரைந்து முடியும். பணப்பற்றாக்குறையால் பாதியில் நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள்டு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அண்டை மாநிலம், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. சிலர் பிற மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். கோவில் கும்பாபிஷேத்திற்கு தலைமை தாங்குவீர்கள்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சுக-சப்தமாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். தாய்வழி சொத்து கைக்கு வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் காய்ச்சல், மூச்சுத் திணறல், படபடப்பு வந்துச் செல்லும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பணப்பற்றாக்குறை சமாளிக்க வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாரும் தன்னுடன் முழு அன்புடனோ, பாசத்துடனோ நடந்துக் கொள்ளவில்லை எல்லோரும் நடக்கிறார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.
 
உங்கள் தைரியஸ்தானாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். சகோதரங்கள் கோபப்பட்டாலும் நீங்கள் அனுசரித்துப் போவது நல்லது. வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும்.
 
புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து சொந்த தொழிலுக்கு மாறுவீர்கள். வேலையாட்கள் உங்களுடைய புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். சக ஊழியர்களுக்காக பரிந்துப் பேசி சில சலுகைத் திட்டங்களை பெற்றுத் தருவீர்கள். புது வாய்ப்புகள் வரும்.
 
இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், இருட்டில் இருந்த உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக அமையும்.
 
பரிகாரம்
 
காளையார் கோவிலுக்கு அருகிலுள்ள திருவாடானை எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅம்பாயிரவல்லியம்மை உடனுறை  ஸ்ரீஆதிரத்னநாயகேசுரரை ஏதேனும் ஒரு ஞாயிற்று கிழமையில் சென்று நெய் தீபமேற்றி வணங்குங்கள். மனவளங்குன்றியவர்களுக்கு உதவுங்கள்

துலாம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

மற்றவர்களின் வலி, வருத்தங்களை அறிந்து ஆறுதல் சொல்பவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் நின்றுக் கொண்டு திடீர் பயணங்களையும், சேமிக்க முடியாதபடி செலவினங்களையும், தூக்கமின்மையையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டாகும். நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். தொழிலதிபர்களின் நட்பு கிட்டும்.
 
எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். முன்பு சவாலாக தெரிந்த சில விஷயங்கள் இப்போது சாதாரணமாக முடிவடையும். நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். சொந்த-பந்தங்களின் சுயரூபம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பதவிகள், பொறுப்புகள் தருவார்கள்.
 
கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். கறாராகவும், கண்டிப்பாகவும் பேசுவதை தவிர்த்து கனிவாகப் பேசுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
 
நீங்கள் வெகுநாட்களாக மனதிற்குள்ளேயே கட்டிவைத்திருந்த கனவு வீட்டை, இப்பொழுது நிஜமாக கட்டும் வாய்ப்பு அமையும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் சுமூகமாக முடியும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். சிலர் சொந்த தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது. மலையாளம், கன்னடம் பேசுபவர்களால் நன்மை உண்டாகும்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் லாபாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் வசதி, வாய்ப்புகள் பெருகும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவிவழியில் உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். அறிஞர்கள், நண்பர்கள் சிலரின் கருத்துக்களை கேட்டு அதன்படி நடந்துக் கொள்வீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
 
ராகுபகவான் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சீர் செய்வீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். பணவரவு இருந்தாலும் ஒருபக்கம் செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். என்றாலும் பயணங்களால் அலைச்சல் இருக்கும். எதிர்காலம் பற்றிய பயம் வந்துப் போகும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். அலர்ஜி, இன்பெக்ஷன், தேமல் வரக்கூடும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. எந்த விஷயமாக ஆற அமர யோசித்து களம் இறங்கப்பாருங்கள். எடுத்தோம், கவிழ்தோம் என்றெல்லாம் ஆழம் தெரியாமல் காலை விட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். அவ்வப்போது வரும் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் மதிப்பெண் கூடும். நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் சரியாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. உயர்கல்வி எதிர்பார்த்த கல்விப் பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திருமணத் தடைகள் நீங்கும்.
 
அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். உங்கள் அறிவுப்பூர்வமான, சாதுர்யமான பேச்சை கேட்டு சகாக்கள் மகிழ்வார்கள். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.
 
கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். மக்களால் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய பெயர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.
 
விவசாயிகளே! இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிட்டும். அரசாங்க சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
 
வியாபாரத்தில் அனுபவ அறிவால் லாபம் ஈட்டுவீர்கள். அதிரடியாக சில சலுகைகளை அறிவிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வியாபார சங்கத்தில் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஹார்டுவேர், ஹோட்டல், ஸ்பெக்குலேஷன், கண்சல்டன்சி, பதிப்பகம் வகைகளால் லாபமடைவீர்கள். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். உங்கள் கருத்திற்கு ஒத்தும் போகும் பங்குதாரரை சேர்ப்பீர்கள்.
 
உத்யோகத்தில் உங்களுடைய திறமையை மேலும் அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். சக ஊழியர்களும் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு அதிரடி வளர்ச்சியையும், பிரபலங்களின் அந்தஸ்தையும் பெற்றுத் தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய வீடான 5-ம் வீட்டிற்குள் வந்து அமர்கிறார். எனவே புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் கேது அமர்வதால் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் மனஇறுக்கம் உண்டாகும்.
 
பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. கோர்டு, கேஸ் என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். கணவன்-மனைவிக்குள் ஒளிவு, மறைவில்லாமல் பழகுவது நல்லது. மனைவிக்கு கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். படிப்பின் பொருட்டு அவர்களை கசக்கிப் பிழிய வேண்டாம். விட்டுப் பிடிப்பது நல்லது. அவர்களிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை.
 
மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரை நன்கு விசாரித்து சம்பந்தம் செய்துக் கொள்வது நல்லது. மகனின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து வருந்துவீர்கள். அவரின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. சிலர் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. படிகளில் ஏறும் போது கவனம் தேவை.
 
உறவினர்களில் சிலர் உங்கள் நிலையறியாமல் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். பாகப் பிரிவினையால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புதிய நண்பர்களை நம்பி பழைய நட்பை இழந்துவிடாதீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். குற்றமற்றவர்கள் யாரும் இல்லை யாராக இருந்தாலும் ஒவ்வொருவரிடமும் சிறுசிறு குற்றம், குறைகள் இருக்கத்தான் செய்யும்.
 
குற்றம் பார்கின், சுற்றம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது. மாதா மாதம் கடன் தொகை கொடுத்து அசலைத் தந்தாலும் வட்டி மட்டும் குறையவே இல்லையே என்று அவ்வப்போது கலங்குவீர்கள். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் தைரியஸ்தானாதிபதியும் -சஷ்டமாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். மனோபலம் கூடும். வங்கிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் அவ்வப்போது ஒருவித வெறுமையை உணருவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். வெளியூருக்குச் செல்லும் போது வீட்டை சரியாக பூட்டிச் செல்லவும். சமையல் வாயு கசியக் கூடும். கவனம் தேவை. தங்க நகைகளை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும்.
 
உங்கள் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.
 
வியாபாரத்தில் சில நுணுக்கங்களையும் தெரிந்துக் கொள்வீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் பிறக்கும். அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பழைய பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள்.
 
இந்த இராகு-கேது பெயர்ச்சி ஒருபக்கம் உங்களை எதிர்நீச்சல் போட வைத்தாலும் மற்றோருபக்கம் விழுந்துக் கிடந்த உங்களை தலை நிமிரச் செய்வதுடன், சமூகத்தில் புது கௌரவத்தையும் பெற்றுத் தரும்.
 
பரிகாரம்
 
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இருக்கும் நயினார்கோவில் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாதரை சதுர்த்தசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயாளிக்கு உதவுங்கள்.

விருச்சிகம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு தொட்ட காரியங்களை துலங்க வைத்ததுடன், ஓரளவு செல்வம், செல்வாக்கையும் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமருகிறார். எனவே மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வளைந்துக் கொடுத்தால் தான் வானம் போல் உயரால் என்பதை உணருவீர்கள்.
 
எனவே சில இடங்களில் சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். சிலர் புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். சன்னியாசிகள், சாதுக்கள் உதவுவார்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும். சொந்த-பந்தங்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகளும் விலகும்.
 
ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவிற்கு பணவரவு உண்டு. இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். புது முதலீடு செய்து சிலர் தொழில் தொடங்குவீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.
 
காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள், கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களிடமிருந்து விலகுவீர்கள். என்றாலும் வேலைச்சுமை அதிகமாகும். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். எனவே கவனமாக இருங்கள். உங்கள் உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் ஜீவனாதிபதி சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.
 
ராகுபகவான் உங்கள் சப்தம-விரையாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் பணப்பற்றாக்குறை நீங்கும். தவணை முறையில் பணம் செலுத்தி வாகனம் வாங்குவீர்கள். மனைவியின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழியில் மதிப்புக் கூடும். வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நவீன ரக மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் முன்கோபம், சிறுசிறு விபத்துகள், பேச்சால் பிரச்னைகள் வந்துப் போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் நீங்கள் இருப்பீர்கள். ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். வேதியியல் ஆய்வு கூடத்தில் பரிசோதனையின் போது அமிலங்கள் கை, காலில் விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டுரை, பேச்சு, இலக்கிய போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் கனவு நனவாகும். காதல் கனியும். புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் வரும். திருமணம் தள்ளிக் கொண்டே போனதே! உங்கள் ஆசைப்படி கல்யாணம் முடியும்.
 
அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலால் பதவியை இழக்க வேண்டி வரும். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள். உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும்.
 
கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும்.
 
விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை வெகுவாக குறையும். பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும். விளைச்சல் சுமாராக இருக்கும். பம்பு செட் பழுதாகி சரியாகும்.
 
வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கணிசமான லாபம் வரும். என்றாலும் தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் சின்ன சின்ன நஷ்டங்கள் வந்துப் போகும். எதிர்பார்த்த ஆடர் தாமதமாக வரும். வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது விசாரித்து சேர்ப்பது நல்லது. அண்டை மாநில வேலையாட்களிடம் கவனமாக இருங்கள். பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். மருந்து, கெமிக்கல், ஸ்டேஷனரி தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
 
உத்யோக ஸ்தானமான 10-ம் இடத்தில் ராகு அமர்வதால் உத்யோகத்தில் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், முகவரி இல்லாத குற்றச்சாட்டு கடிதங்களின் அடிப்படையில் சின்ன சின்ன விசாரணைகளையெல்லாம் சந்திக்க வேண்டிய சூழல் வரும். உங்கள் வேலையை மற்றொருவரிடம் ஒப்படைக்க வேண்டாம். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள்.
 
சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். சிலர் உங்களுடைய சாதனைகளை குறுக்குவழியில் சென்று பறிக்க முயல்வார்கள். வெளிநாட்டில் வேலைத் தேடுபவர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். புது வேலை மாறுவதில் அவசர முடிவுகள் வேண்டாம்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றத்தையும், உறவுகள் மத்தியில் கசப்புணர்வுகளையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் மனஇறுக்கம், வீண் குழப்பங்களெல்லாம் விலகும். இனி எதிலும் ஒரு தெளிவுப் பிறக்கும். அடிக்கடி கர்ப்பச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். நெடுநாட்களாக தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
 
மகளின் கல்யாணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். என்றாலும் 4-ல் கேது அமர்வதால் உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு முதுகுத் தண்டில் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். மீண்டும் பழைய பிரச்னைகளை சந்திக்க நேரிடுமோ என்ற ஒரு அச்சம் வரக்கூடும்.
 
அரசிடமிருந்து முறையான கட்டிட வரைப்பட அனுமதிப் பெறாமல் வீடு கட்ட வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி, விற்பனை வரிகளையெல்லாம் கால தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டி வரும். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். அசைவம் மற்றும் கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. லைசன்ஸ், இன்சூரன்சு, பாஸ்போட்டையெல்லாம் புதுப்பிக்க தவறாதீர்கள். வெளியூரிலோ, நகர எல்லைப் பகுதியிலோ சொத்து வாங்கியிருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. சிலர் உங்களுடைய இடத்தை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பிருக்கிறது. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சிலர் இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் தன-பூர்வ புண்யாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.  பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தெய்வீக நம்பிக்கை அதிகமாகும். சித்தர் பீடம் சென்று தியானம் செய்வீர்கள். பூர்வீக சொத்தில் மராமத்துப் பணிகள் மேற்கொள்வீர்கள். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் வேலைகளை உடனே முடிக்கவேண்டுமென்று நினைப்பீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். நீங்கள் நியாயமாகவும், யதார்த்தமாகவும் பேசினாலும் சிலர் நீங்கள் ஒருசார்பாக பேசுவதாக குறைக் கூறுவார்கள். உங்களை தாழ்த்துப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள்.
 
உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வீடு வாங்கும் முன் வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து க்ளீயரன்ஸ் சர்ட்டிபிகேட் வாங்கியப் பின் வீடு வாங்குவது நல்லது. இல்லையென்றால் வில்லங்கமான வீடுடோ அல்லது இடமோ வாங்கிவிட்டு பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் வரும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும்.
 
வியாபாரத்தில் காலையில் வியாபாரம் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் சுமாராக போகும். புது முதலீடுகளை யோசித்து செய்வது நல்லது. பங்குதாரர்களுடன் வளைந்து போங்கள். வேலையாட்கள் முரண்பாடாகப் பேசுவார்கள். வாடிக்கையாளர்களை மனங்கோணாமல் நடத்துங்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.
 
இந்த இராகு-கேது பெயர்ச்சி ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையை தந்தாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தால் சந்தோஷத்தையும் தரும்.
 
பரிகாரம்:
 
ஸ்ரீவில்லிப்புத்தூரில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீஆண்டாள் அம்மையார் பூசித்த ஸ்ரீவடபெருங்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீவடபத்திர சயனரை ஏதேனும் ஒரு ஏகாதசி திதி நாளில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு உணவு, உடை தானம் செய்யுங்கள்.

தனுசு: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

மற்றவர்கள் தயவில் வாழ விரும்பாதவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும், உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றத்தையும், சிறுசிறு தலைக்குனிவான சம்பவங்களையும் தந்துக் கொண்டிருந்த ராகுபவான் இப்போது உங்களுக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும்.
 
மற்றவர்கள் தயவின்றி தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். எத்தனைப் பிரச்னைகள், நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்து முன்னேறும் சக்தி உண்டாகும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி முழுமையடையும்.
 
என்றாலும் தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரும். அவருக்கு நெஞ்சு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள், இரத்த அழுத்தம் வந்துச் செல்லும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். பாகப்பிரிவினை விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். எதிராளிகள் வாய்தா வாங்கி வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.  நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்ளுங்கள். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் யோகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் நினைத்தது நிறைவேறும். வேலையில்லாமல் வீட்டிலே முடங்கிக் கிடந்தவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலை அமையும். அயல்நாடு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
 
ராகுபகவான் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது பெருமூச்சுவிடுவீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். பொய்யான விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள். வாகனம் அடிக்கடி பழுதாகும். உங்களுக்கு தெரிந்த வி.ஐ.பியை நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுமென பிடிவாதமாக கேட்பார்கள்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வேற்றுமொழிப் பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பெரிய பதவியில் இருக்கும் பழைய நண்பர்களால் உதவிகள் உண்டு. நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த சொந்த-பந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பீர்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்.
 
கன்னிப் பெண்களே! மதில் மேல் பூனையாக இருந்த நிலை மாறும். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும். அரசு தேர்வுகளில் வெற்றி உண்டு. வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள். நீங்கள் நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை பெற்றோர் வாங்கித் தருவார்கள்.
 
அரசியல்வாதிகளே! தலைமையே வியந்து பாராட்டுமளவிற்கு உங்களுடைய களப்பணி சிறப்பாக இருக்கும். பொது மக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும்.
 
கலைத்துறையினரே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய இருந்த படம் ரிலீசாகும். உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும்.
 
விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். காய்கறிகளை பயிரிடுங்கள். பழைய கடன் தள்ளுபடியாகும். தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் வீட்டில் நடந்தேறும்.
 
வியாபாரம் செழிக்கும். அசல் வந்தால் போதும் என்று நினைத்திருந்த உங்களுக்கு கணிசமாக ஆதாயமுண்டாகும். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாக கடையை விரிவுபடுத்தி நவீனமாக்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். இரும்பு, நெசவு, புரோக்கரேஜ், கடல் வாழ் உயிரினங்களால் லாபமமடைவீர்கள். உங்கள் திட்டத்தை ஊக்குவிக்கும், உங்களை உற்சாகப்படுத்தும் பங்குதாரர் அறிமுகமாவார்.
 
உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களை எதிரியை போல பார்த்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். வழக்கில் வெற்றியடைந்து இழந்த பெரிய பதவியில் மீண்டும் அமர்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. புது மேலதிகாரி உங்களை புரிந்து கொள்வார். சக ஊழியர்களை திருத்துவீர்கள். இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள்.
 
கேதுவின் பலன்கள் :      
 
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு தாயாருடன் மோதலையும், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளையும் தந்து எதிலும் முன்னேற விடாமல் நலிவடையச் செய்த கேதுபகவான் இப்போது ராசிக்கு மூன்றாவது வீட்டில் முகமலர்ந்து அமர்கிறார். ராஜதந்திரமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். உலக விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள்.
 
இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பம் இன்ப மயமாகும். வேலைக் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஊர் ஓதுக்குபுறமாக வாங்கியிருந்த இடத்தை விற்று நகரத்தில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தாயாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும். வெளிநாட்டு பயணம் நீங்கள் எதிர்பார்த்த படி அமையும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.
 
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். கோவில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிக மைலேஜ் தரக் கூடிய நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றிய இமேஜ் அதிகமாகும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உயர்வு உண்டு.
 
சிலர் புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பங்குச் சந்தை லாபம் தரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். அரசு விவகாரங்கள் தாமதமின்றி உடனே முடிவடையும். அக்கம்-பக்கம் கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒரு வழியாக தந்து முடிப்பீர்கள். ஆன்மீகவாதிகள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும்.
 
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் ராசிநாதனும்-சுகாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பிகளிடமிருந்து கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும் வரும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். தாயார் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும். சிலர் உங்களை பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், நீங்கள் இல்லாத போது உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். மனைவிக்கு அப்ரண்டீஸ், சிறுநீரக கல், கழுத்தில் நரம்புக் கோளாறு வந்துச் செல்லும்.
 
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். மகளின் கோபம் குறையும். அவருக்கு திருமணம் நிச்சயமாகும். மகன் பொறுப்பாக நடந்துக் கொள்வார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். பூர்வீக சொத்தால் பணம் வரும். என்றாலும் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். அவ்வப்போது ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும்.
 
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலமாக உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் அலுவலகப் பிரச்னைகள் மட்டுமல்லாது அதிகாரிகளின் சொந்த பிரச்னைகளையும் தீர்த்து வைப்பீர்கள். சம்பளம் உயரும். மூத்த அதிகாரி அடிக்கடி விடுப்பில் செல்வதால் அந்தப் பதவிக்குரிய பணிகளையும் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்க வைப்பீர்கள்.
 
இந்த இராகு-கேது மாற்றம் முனகிக் கொண்டிருந்த உங்களை முழக்கமிட வைப்பதுடன் கூடாபழக்க வழக்கங்களிலிருந்து உங்களை விடுவிப்பதாகவும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குவதாகவும் அமையும்.
 
பரிகாரம்:
 
மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள திருக்களாஞ்சேரி எனும் இத்தலத்தில் மூலவர் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாகநாதரை ஏதேனும் ஒரு வியாழக் கிழமையில் வில்வார்ச்சனை செய்து வணங்குங்கள். பழைய பள்ளிக்கூடம் அல்லது கோவிலை புதுப்பிக்க உதவுங்கள்

மகரம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

பெற்ற தாயையும், பிறந்த மண்ணையும் அதிகம் நேசிப்பவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து கொண்டு தந்தையாருடன் மோதல்களையும், அடுக்கடுக்கான செலவுகளையும் தந்த ராகு பகவான் இப்பொழுது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல் பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும்.
 
அவர் உங்களைப் புரிந்துக் கொள்வார். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். என்றாலும் ராகு 8-ல் அமர்வதால் திட்டமிடாத பயணங்களும், அலைச்சல்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். வெளிநாடு சென்று வருவீர்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள்.
 
கணவன்-மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உஷாராக இருங்கள். பழைய வாகனத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
 
சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பார்கள். நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். உறவினர், நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். இடமாற்றம் இருக்கும்.
 
சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். வீட்டில் களவு நிகழ வாய்ப்பிருக்கிறது. யாரும் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையென்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். பிள்ளைகளிடம் உங்கள் கோபத்தை காட்ட வேண்டாம். வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் அஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீட்டு விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். அரசாங்க அனுமதிப் பெறாத ஃபைனாஸ் கம்பெனி, சிட்பன்சில் பணம் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
 
ராகுபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜுவனாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது வேலைக் கிடைக்கும். கௌரவப் பதவி தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வீட்டில் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோர்களை சந்தித்து ஆசிப் பெறுவிர்கள். என்றாலும் புது முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
 
மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்காமல் முதல் வரிசையில் வந்தமருங்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். சக மாணவர்களுடன் கசப்புணர்வுகள் வந்துச் செல்லும். பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
 
கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். காதலில் விழாமல் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தேமல், சையனஸ் தொந்தரவுகள் வரக்கூடும். வருங்காலத்தைப் பற்றி யோசிக்கத் தவறாதீர்கள்.
 
அரசியல்வாதிகளே! வறட்டுக் கவுரவத்திற்காக கை காசை தண்ணியா இறைக்காதீர்கள். வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும்.
 
கலைத்துறையினர்களே! வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.
 
விவசாயிகளே! நிலத்தகராறுப் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சுமூகமாகப் பேசி தீர்ப்பது நல்லது. வழக்கு, வியாஜ்யம் என்று நேரத்தை வீணடிக்காதீர்கள். இரவு நேரத்தில் வயலுக்கு செல்லும் போது கைவிளக்குடன் செல்லுங்கள். பாம்பு குறுக்கிட வாய்ப்பிருக்கிறது.
 
வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வேலையாட்களுக்கு முன் பணம் தர வேண்டாம்.
 
உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், மற்றொருசாரர் எதிராகவும் செயல்படுவார்கள். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள உயர்வையும் போராடி பெற வேண்டி வரும். சிலருக்கு இடமாற்றம் வரும்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு எதையும் தாங்கும் மனப்பக்குவத்தையும், விடாமுயற்சியையும் கொடுத்து வந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிற்குள் நுழைகிறார். எனவே இனி வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்தப்பாருங்கள். எதையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது.
 
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி வந்துப் போகும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மருந்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. முன்கோபத்துடன் பேசி சொற் குற்றம், பொருள் குற்றத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலமாக சச்சரவுகளில் சிக்குவீர்கள்.
 
சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வழக்கால் நிம்மதியிழப்பீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சேவகாதிபதியும்-விரயாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆன்மிகப் பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பால்ய நண்பர்களை பகைத்தக் கொள்ளாதீர்கள்.
 
உங்கள் சுக-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் தடைப்பட்ட காரியங்களெல்லாம் முடிவடையும். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். அடகிலிருந்த பத்திரங்கள், நகைகளை மீட்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
 
வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்க வேண்டி வரும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உயரதிகாரிகள் உங்கள் குறை நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
 
இந்த ராகு-கேது மாற்றம் புதிய படிப்பினைகளை தருவதாகவும், சமூகத்திலும், வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் கொஞ்சம் நெளிவு, சுளிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும்.
 
பரிகாரம்:
 
ஆடுதுறை-சூரியனார் கோவிலுக்கு அருகிலுள்ள திருலோக்கி எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஷிராதிசயன பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள். முடிந்தால் இரத்த தானம் செய்யுங்கள்.

கும்பம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

அடுத்தவர்களின் நிறை, குறைகளை இங்கிதமாக எடுத்துரைப்பதில் வல்லவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை படாதபாடு படுத்தியெடுத்திக் கொண்டிருந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் திக்கு திசையறிவீர்கள். உங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்த ராகுபகவான் இப்பொழுது உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வரப்போகிறார். சோம்பல் நீங்கி உற்சாகமடைவீர்கள்.
 
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகு அமர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது.
 
மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை அப்படியே மறந்து விடுவது நல்லது. அவருடன் எதிர்வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, தைராய்டு பிரச்னை, முதுகுத் தண்டில் வலி, இரத்த அழுத்தம் வந்துப் போகும். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
 
யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். மறதியல் விலை உயர்ந்த செல்போன், நகைகளை இழக்க நேரிடும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்கும் யோகம் உண்டாகும். அவ்வப்போது ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும். திருமணம் தள்ளிப் போய் முடியும். உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் நிதானம் அவசியம்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நடக்கும். அரசு விவகாரங்களில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். என்றாலும் வேனல் கட்டி, உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வந்துப் போகும். மனைவிக்கும் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். அயல்£டு செல்ல விசா கிடைக்கும்.
 
ராகுபகவான் உங்கள் யோகாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் பணம் வரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். சிலர் வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பெற்றோரின் உடல் நிலை சீராகும். கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களைக்கட்டும். உறவினர்கள் மதிப்பார்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கனவுத் தொல்லை வந்துப் போகும். தாழ்வுமனப்பான்மை மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப்பாருங்கள். வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்த்துவிடுங்கள். வாகனம் வாங்குவீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள். நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோரிடம் எதிர்விவாதம் செய்துக் கொண்டிருக்காதீர்கள்.
 
கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவர்களுக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். வயிற்று வலி, தோலில் அலர்ஜி வந்துப் போகும்.
 
அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சியினரை வசைப்பாட வேண்டாம். தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள்.
 
கலைத்துறையினரே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்ன சின்ன வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
விவசாயிகளே! வாய்க்கால் தகராறு, வரப்பு தகராறை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம். பூச்சித் தொல்லை அதிகரிக்கும். மரப் பயிர்களும், தோட்டப் பயிர்களும் ஆதாயம் தரும்.
 
வியாபாரத்தில் விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். லாபம் மந்தமாக இருக்கும். கூட்டுத் தொழில் வேண்டாமே. புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கடையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். கமிஷன், ரியல் எஸ்டேட், மூலிகை, வாகன உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் முன்பு போல் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். சிலர் வழக்கில் சிக்க வாய்ப்பிருக்கிறது.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு உங்களை பக்குவமில்லாமல் பேச வைத்து பல பிரச்சனைகளில் சிக்க வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்தமருவதால் இனி இடம், பொருள், ஏலறிந்துப் பேசத் தொடங்குவீர்கள். தடுமாறிக் கொண்டிருந்த உங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். குடும்பத்தாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். என்றாலும் ராசிக்குள் கேது அமர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.
 
எதிலும் ஒருவித சலிப்பு, முன்கோபம், தலைச்சுற்றல், ஒற்றை தலை வலி, கை, கால் மரத்துப் போகுதல் வந்துச் செல்லும். பணம் வந்தாலும் கட்டுப்படுத்த முடியாதபடி செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். கொழுப்புச் சத்து உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி அவசியமாகிறது. எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்க்கப்பாருங்கள்.
 
இரத்த சோகை வரக்கூடும். இரத்தத்தில் இரும்புச் சத்துகள் குறைய வாய்ப்பிருக்கிறது. மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது. பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை வந்து நீங்கும். வட்டிக்கு வாங்கிய கடனை எப்படி அடைக்கப் போகிறோமோ என்ற பயம் வரும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். யோகா, தியானத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் தன-லாபாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் பாதியில் நின்ற வேலைகளை முடிப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வேற்றமதத்தவர்களின் நட்பால் சாதிப்பீர்கள். சிலர் புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் மனஇறுக்கம், வீண் குழப்பம், எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். தைரியசாலியாக உங்களைக் காட்டிக் கொண்டாலும், உள்மனதில் ஒருவித பயம் பரவும்.
 
உங்களின் சேவகாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் பரபரப்பாக காணப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. சகோதர வகையில் பிணக்குகள் வரும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
 
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைத் தெரிந்துக் கொள்வீர்கள். மக்களின் ரசனையை அறிந்து செயல்படுங்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக நடத்துங்கள். பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். உத்யோகத்தில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலதிகாரியிடம் கொண்டு செல்ல வேண்டாம். கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். புதிதாக அறிமுகமாகும் ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.
 
இந்த ராகு-கேது பெயர்ச்சி எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தையும், கேள்விக்குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதன் மூலமாக ஓரளவு நிம்மதியையும் தரும்.
 
பரிகாரம்:
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிறையணிவாணுதலாள் அம்மை உடனுறை ஸ்ரீநாகேஸ்வரரையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் ஏதேனும் ஒரு பௌர்ணமி திதி நாளில் சென்று வணங்கி வாருங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.

மீனம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

மற்றவர்களை புண்படுத்தாமல் மணிக்கணக்கில் பேசுபவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு எதிலும் ஒருபிடிப்பில்லாமல் செய்தாரே! உங்களை திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், திறமைகள் இருந்தும் சாதிக்க முடியாமல் தவித்தீர்களே! சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பில் சிக்கிக் கொண்டீர்களே! தாழ்மனப்பான்மையால் மனஉளைச்சலுக்கு ஆளானீர்களே! இப்படி உங்களை பாடாய்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார்.
 
குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்தாரே! ஒட்டு உறவில்லாமல் தவித்தீர்களே! உண்மையான பாசமுள்ளவர்களை தேடி அலைந்தீர்களே! இப்படி நாலா விதங்களிலும் உங்களை பாடாய்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்வதால் வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர்கள் இனி உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள்.
 
வீண் சந்தேகம், ஈகோவால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். தாம்பத்யம் இனிக்கும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
 
மகளுக்கு வரன் தேடி அலுத்துப்போனீர்களே! இந்தாண்டு கண்ணுக்கழகான மணமகன் அமைவார். மகனுக்கு எதிர்பார்த்தபடி உயர்கல்வி, உத்யோகம் அமையும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். ஷேர் மூலம் பணம் வரும்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பிறமொழியினர், வெளிமாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடன் பிரச்னைகள் தீரும். அரசாங்க பதவி சிலருக்கு தேடி வரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். ஆனால் கண் எரிச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். புது வேலை அமையும்.
 
ராகுபகவான் உங்கள் சேவகாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் வேலைச்சுமையால் டென்ஷன், காரியத் தடைகள், ஆடம்பரச் செலவுகள் என வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பணவரவு உண்டு. மனைவியுடன் ஆரோக்யமான விவாதங்கள் வரும். அவரின் ஆரோக்யத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வாகனம் பழுதாகி சரியாகும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை கண்டறிவதில் குழப்பம் வரும். சொந்த ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். நல்ல வரன் அமையும். வேலைக் கிடைக்கும். மாதவிடாய்க் கோளாறு, வயிற்று வலி, தூக்கமின்மை நீங்கும். பெற்றோரின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! அதிக மதிப்பெண் பெறுவீர்கள். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். உங்களுடைய தனித்திறமைகளை அதிகரித்துக் கொள்வீர்கள். விளையாட்டு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.
 
அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
 
கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு மதிப்பு, மரியாதைக் கூடும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
 
விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். அடகிலிருந்த பத்திரங்களை மீட்க கடன் உதவிகள் கிடைக்கும். பூச்சித் தொல்லை, வண்டுக் கடியிலிருந்து பயிரை காப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
 
வியாபாரத்தில் இனி பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். தொழிலில் ஆர்வம் பிறக்கும். புது முதலீடுகள் செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆட்டோ மொபைல், ஸ்டேஷனரி, மருந்து, எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள்.
 
உத்யோகத்தில் வழக்கில் வெற்றி பெற்று பெரிய பதவியில் அமர்வீர்கள். சந்தித்த அவமானங்கள் நீங்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சாராணமாக செய்து முடிப்பீர்கள். சில சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பளம் உயரும். புது பொறுப்புகளும், சலுகைகளும் கிடைக்கும். உங்கள் அலுவலகம் நவீனமாகும். அலுவலகத்தில் உங்கள் புகழ் பரவும்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்துக் கொண்டு ஆரோக்ய குறைவையும், மனதில் ஒருவித பதட்டத்தையும் தந்து விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்ற கேது இப்போது 12-ம் வீட்டில் சென்று மறைகிறார். எனவே மனப்போராட்டங்கள் ஓயும். சின்னதாக ஒரு நெஞ்சு வலி வந்தாலும் பெரிய நோய் ஏதேனும் இருக்குமோ என்ற பயம் இனி விலகும். ஆரோக்யம் சீராகும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.
 
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். கோபம் குறையும். கலையிழந்திருந்த உங்கள் முகம் இனி மலரும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களின் உள்மனதைப் புரிந்துக் கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். ஆன்மிகப் பயணங்கள் சென்று வருவீர்கள். என்றாலும் திட்டமிடாத பயணங்களும், அலைச்சல்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். எவ்வளவுப் பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். சில நாட்கள் தூக்கம் குறையும்.
 
பழைய கசப்பான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து எடுத்து நடத்துவீர்கள். சொத்துப் பிரச்னைகள் நல்ல விதத்தில் முடிவடையும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.  
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. சில இருசக்கர வாகனத்தை மாற்றி நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். நீண்ட காலமாக போக வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் ஏதோ ஒன்றை இழந்ததைப் போல அவ்வப்போது இருப்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட நம்பிக்கை துரேகமான செயல்களை நினைத்து வருந்துவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்கள் நட்பை இழக்க நேரிடும். எல்லோரும் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றார்கள் என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.
 
உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் மனஇறுக்கங்கள் குறையும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள். தந்தையாரின் ஆதரவுப் பெருகம். தந்தைவழி சொத்துகளை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
 
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அலுவலகப் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள்.
 
இந்த ராகு-கேது மாற்றம் அடிமைபட்டுக் கிடந்த உங்களை விஸ்வரூபமெடுக்க வைப்பதுடன் திடீர் யோகங்களை தருவதாக அமையும்.
 
பரிகாரம்:
 
புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பேரையூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் நாகராஜன் பூஜித்த ஸ்ரீநாகநாதரையும், ஸ்ரீபிரகதாம்பாளையும் வணங்குங்கள். காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உதவுங்கள்.

Leave a Reply